tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, நவ. 27-
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமை இந்தியாவில் இருந்து பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோஷத்துடன் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு, அசாம் ஐக்கிய 
விடுதலை முன்னணி(உல்பா). பிரிவினைவாத கோஷத்துடன் இந்திய ராணுவத்துக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிய உல்பா அமைப்பை மத்திய அரசு 1990ல் முதல்முறையாக தடை 
செய்தது. அதன்பிறகு அந்த தடையை மத்திய அரசு தொடர்ந்து நீட்டித்து வருகிறது.
கடைசியாக, 2019 நவம்பர் 27ம் தேதி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் 1967ன் கீழ் உல்பா அமைப்பு மீதான தடையை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது. அந்த தடையானது 
இன்றுடன் நிறைவடையும் நிலையில், உல்பா அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
உல்பா அமைப்பானது அதன் அத்தனை பிரிவுகள் மற்றும் அணிகளுடன் இணைந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
அசாமை இந்தியாவில் இருந்து பிரிப்பது, தொடர்ந்து மிரட்டல் விடுப்பது, மிரட்டி பணம் பறிப்பது மற்றும் வன்முறைக்காக பிற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பது 
ஆகியவற்றை தனது கொள்கையாக உல்பா வைத்துள்ளது.
2019 நவம்பர் 27 முதல் 2024 ஜூலை முதல் தேதிவரை, சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருப்பது, குண்டுவெடிப்புகள் நடத்த முயற்சி உட்பட அந்த அமைப்பு மீது 16 
கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் இந்த அமைப்பு 27 சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 63 பேர்  சரணடைந்துள்ளனர். 27 நவீன துப்பாக்கிகள்,  550 ரவுண்டு தோட்டாக்கள், கையெறி குண்டுகள், வெடிகுண்டுகள் அந்த அமைப்பிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த  அமைப்பு மீதான தடை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ராசி பலன்

சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். உறவுகள் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். முயற்சிக்கான பாராட்டுகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள்... மேலும் படிக்க

நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வாகன கடன் உதவிகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் மேம்படும்.... மேலும் படிக்க


கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நிர்வாகத்துறையில் திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தை விரிவு செய்வது சார்ந்த... மேலும் படிக்க

தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். விருந்தினர்களின் வருகை ஏற்படும். மனதில் தெளிவுகள் பிறக்கும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் சில நுட்பங்களை அறிவீர்கள். பெரியவர்களின் ஆலோசனைகள் மனதில்... மேலும் படிக்க

பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். சொத்து பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபாரம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களால் நினைத்தது நிறைவேறும். முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில்... மேலும் படிக்க

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பேச்சுவார்த்தைகளால் சாதகமான சூழல் அமையும். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பணி நிமித்தமான சில பொறுப்புகள் குறையும். வேலையாட்களிடம் தட்டிக் கொடுத்துச் செயல்படவும். உழைப்பிற்கான மதிப்புகள் தாமதமாகக்... மேலும் படிக்க

குண நலன்களில் சில மாற்றங்கள் காணப்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். ஆரோக்கிய செயல்களில் கவனத்துடன் இருக்கவும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

ரகசியமான சில செயல்களால் ஆதாயம் அடைவீர்கள். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் பொறுப்புகள் குறையும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். வழக்குகளில் பொறுமையுடன் செயல்படவும். யாரையும் அலட்சியப்படுத்திச் செயல்படுவதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

புதிய யுக்திகளால் மாற்றம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைச் செயல்படுத்துவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். உடல்... மேலும் படிக்க

சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணியில் செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த... மேலும் படிக்க

நினைத்த பணிகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். எதிராக இருந்தவர்கள் விலகுவார்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். எதிலும் துடிப்புடன்... மேலும் படிக்க

திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களைத் தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள். பணிச் சுமையினால் கோபம் அதிகரிக்கும். இயந்திர துறைகளில் கவனம்... மேலும் படிக்க