tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, நவ. 27-
கிறிஸ்தவ போதகரான டாக்டர் கே.வி.பால், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘ஓட்டு மிஷின் (இவிஎம்) முறையை ரத்து செய்து, ஓட்டு சீட்டுகள் அடிப்படையில் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்; வாக்காளர்களுக்கு பணம் மற்றும் மது வழங்கும் வேட்பாளர்கள், 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும்; வாக்களிப்போர் எண்ணிக்கையை அதிகரிக்க விழிப்புணர்வு கல்வி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; அரசியல் கட்சிகளின் நிதி பின்னணி விசாரிக்க ஒரு புலனாய்வு அமைப்பை அமைக்க வேண்டும்; தேர்தல் வன்முறைகளை தடுக்க ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும்’ என்று முறையிட்டிருந்தார்.
இந்த மனுவை, நீதிபதிகள் விக்ரம் நாத், பி.பி.வராலே கொண்ட பெஞ்ச் நேற்று விசாரித்தது.
டாக்டர் கே.வி.பால் நேரடியாக வாதிட்டார். ‘‘இன்று அரசியல் சாசன தினம். அரசியல் சட்டத்தின் 14, 19, 21 பிரிவுகள் வழங்கும் உரிமைகளை இப்போதுள்ள தேர்தல் நடைமுறை பாதிக்கிறது. தேர்தல் பற்றி அரசியல்வாதிதான் முறையிட வேண்டும் என்று கிடையாது. அரசியல் சட்டத்தின் 32வது பிரிவுப்படி யாரும் முறையிடலாம். அந்த வகையில்தான் முறையிடுகிறேன். ஓட்டு மிஷின் மூலம் ஓட்டுப்பதிவில் முறைகேடு நடப்பதாக சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். தொழில்நுட்ப  நிபுணர் எலான் மஸ்க்கும் மோசடி நடத்த முடியும் என்று கூறியிருக்கிறார். இவிஎம்களை உடைப்பதும் நடக்கிறது. நான் 155 நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். அங்கெல்லாம் ஓட்டு சீட்டு முறை உள்ளது. 180 நாடுகள் பின்பற்றும் ஓட்டு சீட்டு முறையை நாமும் பின்பற்ற  வேண்டும். தேர்தலில் பணபலம் முக்கிய விஷயமாக மாறியிருக்கிறது. மக்களவைத் தேர்தலில் ஒரு தொழிலதிபர் பல அரசியல் கட்சிகளுக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய்  நன்கொடை வழங்கியிருக்கிறார். ஜனநாயகத்தை பாதுகாக்க, தேர்தல் நடைமுறையை சீர்திருத்த வேண்டும். என் மனுவை ஏற்று, அரசியல் கட்சிகளும் அரசும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’’ என்று அவர் வாதிட்டார்.
நீதிபதிகள் கருத்து கூறுகையில், ‘‘இப்படிப்பட்ட மனுக்களை அடிக்கடி தாக்கல் செய்கிறீர்கள். இப்படியெல்லாம் மனு செய்ய எப்படி ஐடியா வருகிறது? நீங்கள் விரும்பியவர் வெற்றியடைந்தால் ஓட்டு மிஷின்களில் எந்த பிரச்னையும் இல்லை, தோல்வியடைந்தால் மட்டும் மிஷின்கள் சரியில்லை. ஓட்டு சீட்டு முறை வேண்டுமா? சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி எல்லாம் அப்படித்தான் பேசியிருக்கிறார்கள். அதை எப்படி ஏற்க முடியும்? 180 நாடுகளில் ஓட்டு சீட்டு முறை இருப்பதால் இந்தியாவும் அதை பின்பற்ற வேண்டுமா? இந்தியா, வித்தியாசமாக செயல்படக் கூடாதா?’’ என்று கேள்விகளைக் குவித்து கண்டித்தனர். பிறகு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
*

ராசி பலன்

சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். உறவுகள் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். முயற்சிக்கான பாராட்டுகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள்... மேலும் படிக்க

நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வாகன கடன் உதவிகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் மேம்படும்.... மேலும் படிக்க


கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நிர்வாகத்துறையில் திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தை விரிவு செய்வது சார்ந்த... மேலும் படிக்க

தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். விருந்தினர்களின் வருகை ஏற்படும். மனதில் தெளிவுகள் பிறக்கும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் சில நுட்பங்களை அறிவீர்கள். பெரியவர்களின் ஆலோசனைகள் மனதில்... மேலும் படிக்க

பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். சொத்து பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபாரம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களால் நினைத்தது நிறைவேறும். முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில்... மேலும் படிக்க

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பேச்சுவார்த்தைகளால் சாதகமான சூழல் அமையும். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பணி நிமித்தமான சில பொறுப்புகள் குறையும். வேலையாட்களிடம் தட்டிக் கொடுத்துச் செயல்படவும். உழைப்பிற்கான மதிப்புகள் தாமதமாகக்... மேலும் படிக்க

குண நலன்களில் சில மாற்றங்கள் காணப்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். ஆரோக்கிய செயல்களில் கவனத்துடன் இருக்கவும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

ரகசியமான சில செயல்களால் ஆதாயம் அடைவீர்கள். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் பொறுப்புகள் குறையும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். வழக்குகளில் பொறுமையுடன் செயல்படவும். யாரையும் அலட்சியப்படுத்திச் செயல்படுவதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

புதிய யுக்திகளால் மாற்றம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைச் செயல்படுத்துவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். உடல்... மேலும் படிக்க

சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணியில் செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த... மேலும் படிக்க

நினைத்த பணிகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். எதிராக இருந்தவர்கள் விலகுவார்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். எதிலும் துடிப்புடன்... மேலும் படிக்க

திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களைத் தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள். பணிச் சுமையினால் கோபம் அதிகரிக்கும். இயந்திர துறைகளில் கவனம்... மேலும் படிக்க