tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

சென்னை, ஜன. 9–

அதிமுக ஆட்சியில் அன்றைய முதல்வர் எடப்பாடி 'சார்' ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் லட்சணம் இதுதான் என்று பொள்ளாச்சி பாலியல் வழக்கை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

 சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சட்டசபையில் நேற்று கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்தார். 24.12.2024 அன்று பிற்பகல் சென்னை மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், குற்றவாளி ஞானசேகரன் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இது காவல் துறை எடுத்த துரிதமான, சரியான நடவடிக்கை என்று விளக்கம் அளித்தார்.

பொள்ளாச்சி வழக்கு 

தொடர்ந்து அவர் பேசியதாவது:

கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட பல பெண்களில் ஒருவர், தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி, தன்னுடைய அண்ணனிடம் சொல்கிறார். பிரச்சனைக்குரிய நான்கு பேரையும் அவரே பிடித்துக் கொண்டு வந்து பொள்ளாச்சி டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கின்றார். பாலியல் தொல்லை, ஆபாசமாக படம் எடுத்தல், செயின் பறிப்பு என்று புகார் கடிதம் தரப்படுகிறது. வீடியோக்கள், செல்போன்கள் ஆகியவற்றுடன் 4 குற்றவாளிகளையும் இவர்கள் ஒப்படைக்கிறார்கள். இதனைப் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதியவில்லை; எல்லாரையும் விடுவித்துவிட்டார்கள். இதுதான் அன்றைய முதல்வர் "சார்" ஆட்சியில் சட்டம்-ஒழுங்கின் லட்சணம்.

சிபிஐ விசாரணை

அதுமட்டுமா? அதிமுக பிரமுகர் பார் நாகராஜன் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனைத் தாக்குகிறார். அந்தப் புகார் மீதும் நடவடிக்கை எடுக்காத அரசுதான் அ.தி.மு.க. அரசு. சம்பந்தப்பட்ட முக்கிய நபரான திருநாவுக்கரசை கைது செய்யாமல், ஏதோ மூன்று பேரை கைது செய்து கணக்கை முடிக்கப் பார்த்தார்கள். ஆனால், சி.பி.ஐ. விசாரணையில், பொள்ளாச்சி சம்பவம் முழுவதுமே அ.தி.மு.க. பிரமுகர்களால்தான் நடத்தப்பட்டது என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.

 இப்படி, பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய 'சார்'ங்க எல்லாம் இப்பொழுது பேட்ஜ் அணிந்துகொண்டு உட்கார்ந்திருந்து, இப்பொழுது பாதியிலேயே எழுந்து போய்விட்டார்கள். 

௧௦௦ சார் கேள்விகள்..

இதுபோன்று 100 சார் கேள்விகளை அ.தி.மு.க.-வைப் பார்த்து என்னால் கேட்க முடியும். தி.மு.க. அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, உயர்கல்வி கற்க வருகிற மாணவிகளை அச்சுறுத்தி, அவர்களுடைய கல்வியைக் கெடுத்துவிடாதீர்கள் என்பதுதான் என்னுடைய பணிவான வேண்டுகோள்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

ராசி பலன்

விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி நிமித்தமான ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். நண்பர்களின்... மேலும் படிக்க

உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். அரசு காரியத்தில் அலைச்சல் மேம்படும். பணிமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மாறுபட்ட சிந்தனைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள்.... மேலும் படிக்க

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். விவசாய பணிகளில் லாபம் ஏற்படும். உற்பத்தி பணிகளில் மேன்மை அடைவீர்கள். கற்பனைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.... மேலும் படிக்க

விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணங்களால்... மேலும் படிக்க

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள்... மேலும் படிக்க

எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்துச் செயல்படவும். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கால்நடைகள் மூலம் சில விரயங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் செயல்களில் சிந்தித்து முடிவு... மேலும் படிக்க

உத்தியோக பணிகளில் இருந்துவந்த இடர்பாடுகள் குறையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் வழியில் சுபச்செய்திகளும், சுபவிரயங்களும் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஆதாயம்... மேலும் படிக்க

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளின் முக்கியத்துவம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். பழைய பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். கால்நடை பணிகளில் லாபம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். முயற்சிகளை செயல்வடிவில் மாற்றுவீர்கள். உயர் கல்வியில் தெளிவுகள் ஏற்படும். மனதில் ஒருவிதமான ஏக்கம் ஏற்பட்டு நீங்கும். எதிலும் உணர்வுப்பூர்வமாக செயல்படுவீர்கள். மனதில்... மேலும் படிக்க

உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில பொறுப்புகள் மூலம் உயர்வுகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். பயணங்களின்போது உடைமைகளில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான விசயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள்... மேலும் படிக்க

வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் காணப்படும். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள்... மேலும் படிக்க