tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என அறிவித்துள்ள பல்கலைக்கழக மானிய குழுவிற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு. தியாகராஜன் கடும் கண்டனம்.

 

சென்னை ஜன 09. 

 

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு. தியாகராஜன் அவர்கள் பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பிற்கு (UGC)கடும் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் 

 

புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ள மானியங்கள் ரத்து, ஏற்காத கல்லூரிகள் வழங்கும் பட்டங்கள் செல்லாது மற்றும் துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் பிரதிநிதித்துவம் நீக்கம் உள்ளிட்ட அறிவிப்பு குறித்து நேற்றைய தினம் ஊடகத்தில் வெளியான செய்தி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது. 

 

ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் கல்வித்துறையை தொடர்ந்து சிதைப்பதையே நோக்கமாக கொண்டு தனிக் கவனம் செலுத்தி வருவது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. 

 

 இந்தியாவிலேயே பள்ளிக் கல்வித்துறையில் இடைநிற்றல் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருவதாக ஒன்றிய அரசு சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இருந்து தெரிய வருகிறது.

உலக அளவில் இளைஞர்களை அதிகம் கொண்டுள்ள இந்திய நாட்டில் குறிப்பாக, தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் முன்னேற்றம் காண மிகவும் இன்றியமையாதது உயர்கல்வியாகும். அரசினால் வழங்கப்படும் உயர்கல்வியின் வாயிலாகவே இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தினையும், முன்னேற்றத்தினையும் கொண்டு வர இயலும் என்பதை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் உயர்கல்வித் துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டுவருகின்றன.

குறிப்பாக, இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த திறன்களை வழங்கிடும் நான் முதல்வன் திட்டம், மாணவிகள் உயர்கல்வியினை தொய்வின்றித் தொடர மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கிடும் புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கான தொழில் திறன் மேம்பாட்டுத் திட்டம், முதலமைச்சரின் ஆராய்ச்சி மானியத் திட்டம், முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை திட்டம், மாணவர்களின் கல்வித் தேவையை நிறைவு செய்யும் உங்களைத் தேடி உயர்கல்வி உள்ளிட்ட பல திட்டங்களால் தமிழகத்தில் உயர்கல்வித் தரத்திலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும் முன்னணி மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது. இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றிய அரசு திட்டமிட்டே தமிழ்நாட்டின் கல்வியை சிதைக்க வேண்டும் என செயல்பட்டு வருகிறது. 

 

புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்கவில்லை என்ற காரணத்தினால் மாற்றான் தாய் மனப்பான்மையோடு செயல்பட்டு வரும் ஒன்றிய அரசு ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சமக்கர சிக் ஷா அபியான் திட்டத்திற்கு வழங்க வேண்டிய 2152 கோடி நிதியை வழங்காமல் பழிவாங்கி வருகிறது. இதன் காரணமாக ஆசிரியர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும், ஊதியம் வழங்குவதிலும், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதிலும், மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதிலும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது‌.

 

 ஒன்றிய அரசை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தியதன் விளைவாக ஒன்றிய அரசு நிதி ஒரு பைசா கூட வழங்காத சூழ்நிலையிலும், மாநில அரசு தன்னுடைய நிதியிலிருந்து சர்வ சிக் ஷா அபியான் திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களுக்கும் ஊதிய ஊதியத்தை வழங்கி வருகிறது. அதாவது புதிய கல்விக் கொள்கையை ஏற்று பி.எம் ஸ்ரீ ஸ்கூல் திட்டத்தில் கையெழுத்திட்டால்தான் நிதியை ஒதுக்குவேன் என்று பிடிவாதம் பிடித்து வரும் ஒன்றிய அரசு ஏழை, எளிய மாணவர்களின் கல்வியில் தொடர்ந்து விளையாடி வருகிறது. 

 

 பள்ளிக்கல்வித்துறையை மிரட்டி நிதியை வழங்காமல் சிதைத்து வரும் ஒன்றிய அரசு அதற்கு ஒரு படி மேலாக தற்போது உயர்கல்வித் துறையையும் சிதைக்கும் வண்ணம் அதனுடைய கைப்பாவையாக உள்ள பல்கலைக்கழக மானிய குழுவை பயன்படுத்தி மிரட்டி வருகிறது. புதிய கல்விக் ணகொள்கையை ஏற்காத பல்கலைக்கழகங்களில் பட்டங்கள் செல்லாது என்றும், மானியங்கள் வழங்கப்படாது என்றும், துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் பிரதிநிதித்துவம் நீக்கம் என்ற அறிவிப்பு குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி மூலம் தெரிய வந்துள்ளது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக இது போன்ற சர்வாதிகார ஆணையை ஒன்றிய அரசு வெளியிட்டதற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

 

இதன் காரணத்தினால்தான் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. சர்வதிகாரப் போக்கோடு

பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டுள்ள அறிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்ற தைரியமாக எதிர்த்தோடு, மட்டுமல்லாமல் மாநிலத்திற்கு என்றே 

 மாநில கல்விக் கொள்கையை உருவாக்க உயர்மட்ட குழுவை திமுக அரசு கடந்த 2022ஆம் ஆண்டு அமைத்தது. இதன் அடிப்படையில் மாநிலக் கல்விக் கொள்கையைத் தயார் செய்ய டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையிலான 12 நபர்களை உள்ளடக்கிய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

மாநில அரசின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்யும் பணியை மேற்கொண்ட இந்த குழு, மாநிலக் கல்விக் கொள்கையை தயார் செய்து இறுதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

 இந்த சூழலில் இது புதிய கல்விக் கொள்கையை திணிப்பது என்பது தமிழ்நாட்டில் என்றென்றும் எடுபடாது. கூட்டாட்சி தத்துவத்தில் இயங்கும் ஒன்றிய அரசு இது போன்ற சர்வதிகாரஆணைகளை எல்லாம் ரத்து செய்துவிட்டு ஏற்கனவே நிலுவையில் உள்ள தொகையை விரைந்து வழங்க வேண்டும் ‌எனவும். அவ்வாறு வழங்கவில்லை என்றால் ஒன்றுபட்ட பேராசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள் ஆகியோரை ஒன்று திரட்டி தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக மிகப்பெரிய போராட்டத்தை ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முன்னெடுக்கும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ராசி பலன்

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் காணப்படும். பொன், பொருட்ச்சேர்க்கை சிலருக்கு உண்டாகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களால் வருமான வாய்ப்புகள் உண்டாகும்.... மேலும் படிக்க

தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள்... மேலும் படிக்க

இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் மறைமுகமாக சில இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். பயணங்கள் மூலம் புதிய... மேலும் படிக்க

அரசுப் பணிகளில் அனுகூலம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். சேமிப்பு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும்.  நிலையான வருமானம்... மேலும் படிக்க

உயரதிகாரிகள் மூலம் ஒத்துழைப்புகள் ஏற்படும். குழந்தைகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். உல்லாச பயணம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தன வரவு மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் புதிய... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட நாள் சேமிப்பு திட்டங்கள் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். பேச்சுக்களில் விவேகமும், பொறுமையும் வேண்டும். பெரியோர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத... மேலும் படிக்க

எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். சகோதரர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில்நுட்ப கருவிகளால் சில... மேலும் படிக்க

தடைகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். பொன், பொருட்ச்சேர்க்கை உண்டாகும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பேச்சு வன்மையால் காரிய சித்தி ஏற்படும். கணவன், மனைவிக்கு இடையே... மேலும் படிக்க

கலை பணிகளில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சில முடிவுகளை எடுப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி... மேலும் படிக்க

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் புது விதமான எண்ணங்களும் ஆசைகளும் உருவாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் சாதகமான சூழல்கள் ஏற்படும். பொழுதுபோக்கான விஷயங்களில் ஈடுபட்டு மனம்... மேலும் படிக்க


நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். கணிதம் சார்ந்த துறைகளில் வாய்ப்புகள் மேம்படும். விவசாயப்... மேலும் படிக்க

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை... மேலும் படிக்க