tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, அக். 1–

 

வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்ற நோக்கத்துடன் அதிகாரிகள் முன் எச்சரிக்கைஉணர்வுடன் செயல்படவேண்டும் என்று முதல்வர் 

ஸ்டாலின் வலியுறுத்தினார்.

 

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். 

துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், அனைத்து துறை செயலர்கள் பங்கேற்றனர்.

 

 

கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:

 

முன்பெல்லாம் வடகிழக்கு பருவமழையானது, பருவம் முழுதும் பரவலாக பெய்தது. காலநிலை மாற்றத்தால், சமீபகாலமாக சில நாட்களிலேயே மொத்தமாக பெய்து விடுகிறது. 

இன்னும் சொல்லப் போனால், சில மணி நேரங்களிலேயே, பருவ காலத்திற்கான மொத்த மழையும் கொட்டித் தீர்த்து விடுகிறது.

இதனால், பொது மக்கள் பெரிதும் 

பாதிக்கப்படுகின்றனர். குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்படுகிறது.

கடந்தஆண்டு அனுபவம்

 சென்னை, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில், கடந்த ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதை, தமிழக அரசு திறம்பட எதிர்கொண்டதன் காரணமாக, 

பாதிப்புக்குள்ளான மாவட்டங்கள், விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பின.

அதேபோல இந்த ஆண்டும், பேரிடர்களின் தாக்கத்தை திறம்பட எதிர்கொள்ள பல்வேறு 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளிட்ட 

விபரங்களை, தமிழிலேயே அறிந்துகொள்ள, TN-Alert’ என்ற மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட மாநகரங்கள், இந்த காலக்கட்டத்தில் மிகுந்த 

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாட்டிற்கு முன்னுதாரணமாக, சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு வார்டு, தெரு வாரியான வெள்ள அபாய எச்சரிக்கை வழங்க, சென்னை 

நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளப் பேரிடர்கள் ஏற்படும் போது, தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் முன்கூட்டியே வெளியேறி 

பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது மிக முக்கியம். வெள்ளம் ஏற்பட்டதும், அரசு இயந்திரம் எவ்வளவு விரைவாக செயல்பட வேண்டுமோ, அவ்வளவு விரைவாக செயல்பட 

வேண்டும். 

உயிரிழப்பு கூடாது

ஓர் உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட வேண்டும்.

வெள்ளத் தடுப்பு பணிகளை, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்னரே, விரைவாக முடிக்க 

வேண்டும். மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், மழைக்கு முன்னதாக தங்கள் பணிகளை துவக்க வேண்டும். வெள்ளக்காலம் என்றாலே, மாணவர்கள் ஆர்வத்தால் ஏரி, குளங்கள் 

போன்ற நீர்நிலைகளுக்கு சென்று விளையாடுவதால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

ெள்ளம், புயல் போன்ற பேரிடர்களில், தகவல் தொடர்பு, மின்சார வசதி போன்ற அத்தியாவசிய சேவைகளை, முடிந்தவரை தடையின்றி வழங்க வேண்டும்.

  குடிநீர், பால், உணவு பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும். நோய் தொற்று ஏற்படாமல் இருக்க, உரிய மருத்துவ சேவைகளை, சுகாதாரத் துறை 

வழங்க வேண்டும்.

பேரிடர் மேலாண்மையில், தன்னார்வலர்கள் பங்கு அவசியம். அவர்களுடன் இணைந்து பணியாற்ற, மாவட்ட நிர்வாகம் முறையான செயல் திட்டத்தை உருவாக்க 

வேண்டும். 

௧௦௦ சதவீதம் வெற்றி

எந்த ஒரு சவாலாக இருந்தாலும், அனைவரும் ஒருமித்த கருத்தோடு, ஓரணியாக நின்று செயல்பட்டால், அதில் வெற்றி, 100 சதவீதம் சாத்தியம்.

எனவே, பருவ மழையால் ஏற்படும் 

சவால்களை எதிர்கொண்டு, பொதுமக்கள் துயர் துடைக்க, அரசு நிர்வாகம் மொத்தமும் ஓரணியாக நின்று செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

+++

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க