tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் விதவிதமான மாம்பழங்களின் விற்பனை களைகட்டியுள்ளது. அந்த வகையில் ஜப்பான் நாட்டில் மாம்பழ வகைக்கு மியாசாகி என பெயர் வைத்துள்ளனர். இதன் மருத்துவ குணங்கள் காரணமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி மியாசாகி மாம்பழங்களின் சுவை தனித்துவம் வாய்ந்தது. இதன் காரணமாக ஒரு கிலோ 2.5 லட்சம் முதல் ரூ3 லட்ச வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ஜப்பானில் இந்த பெயருக்கு "சூரியனின் முட்டை" என்று பொருள். இதில் அதிக மருத்துவ குணங்கள் இருப்பதால் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மியாசாகி மாம்பழங்களின் சுவை, மற்ற மாம்பழங்களை போல அல்லாமல் தனித்துவமாக இருக்கும்

இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் மியாசாகி மாம்பழங்களை விவசாயிகள் வளர்த்து சாதித்து காட்டியுள்ளனர். கர்நாடகா மாநிலம் உடுப்பியை அடுத்து சங்கரபுரா பகுதியில் வசித்து வரும் விவசாயி ஜோசப் லோபோ.இவர் புதுமையான முறையில் விவசாயம் செய்வது, நிலத்திற்கேற்ப மாற்று பயிர்களை விளைவிப்பது இவைகளில் கைதேர்ந்தவர். இவர் தன்னுடைய வீட்டு மாடியில் தோட்டம் வைத்துள்ளார். அதில், ஒயிட் ஜாவா பிளம், பிரேசிலியன் செரிஸ், தைவான் ஆரஞ்சுகள் மற்றும் வளைகுடா நாடுகளை சேர்ந்த பல்வேறு பழங்களை விளைவித்து வருகிறார். இந்த பட்டியலில் மியாசாகி மாம்பழங்களையும் வளர்த்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இதுபற்றி விவசாயி ஜோசப் லோபோ கூறுகையில், தற்போது நிறத்தில் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் வருங்காலத்தில் ஜப்பானில் வசித்து மியாசாகி மாம்பழங்கள் இந்தியாவில் விளைவிக்கப்படும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செடியாக நட்டு வைத்தேன். கடந்த ஆண்டு தான் பூ பூத்தது. இந்த பூக்கள் அடுத்த சில மாதங்களில் பழமாக பழுத்திருக்கும். இந்த ஆண்டு ஏமாற்றம் அளித்தது. இந்த சூழலில் நடப்பாண்டு இதுவரை 7 பழங்கள் மட்டுமே விளைந்துள்ளன

 

 

 

 

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க