tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை: தமிழகத்தில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், காய்கறி விலை உயரக்கூடும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விலை நிலவரத்தை தோட்டக்கலை துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

வழக்கமாக கோடை காலம் தொடங்கியதும், நீர் பற்றாக்குறை, கடும் வெப்பத்தால் பூக்கள் உதிர்வது போன்ற காரணங்களாய் காய்கறி உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் வரத்து குறைந்து, காய்கறி விலை கடுமையாக உயரும். கடந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக ஜூன் மாதம் கடும் வெயில் வாட்டிய நிலையில், தமிழகத்துக்கு அதிக அளவில் தக்காளி உற்பத்தி செய்து அனுப்பும் ஆந்திரா மற்றும் கர்நாடக எல்லையோர பகுதிகளில் தக்காளி பயிர்கள் அழிந்தன. அதனால் தக்காளி வரத்து குறைந்து, சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ.150, சில்லறை விலையில் ரூ.190 என வரலாறு காணாத அளவில் உயர்ந்தது.

அதேபோல, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், மே மாதத்தில் முதல் வாரம் வரையிலும் வரலாறு காணாத வெப்பம் பதிவானது. தற்போது மே மாதத்தில் வரலாறு காணாத வகையில் கோடை மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 18-ம் தேதி 17 செ.மீ. மழை பதிவானது. 2 நாட்களுக்கு தமிழகத்துக்கு ரெட் அலர்ட் மற்றும் அதிகனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வரும் 22-ம் தேதி தமிழகத்தை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

கடும் வெயில் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய தொடர் கனமழை காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அழியவும், பூக்கள் உதிர்ந்து காய்ப்பு திறன் குறையவும் வாய்ப்பு உள்ளது. இதனால், காய்கறி விலை உயரக்கூடும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆனால், கோயம்பேடு சந்தையில் கடந்த ஒரு மாதமாக காய்கறி விலையில் கணிசமாக பெரிய மாற்றம் ஏதும் இல்லை. கடந்த வாரம் கிலோ ரூ.21-க்கு விற்கப்பட்ட தக்காளி நேற்று ரூ.30 ஆக சற்று விலை உயர்ந்து இருந்தது. வழக்கமாக கிலோ ரூ.10-க்குள் விற்கப்படும் முட்டைக்கோஸ், முள்ளங்கி, நூக்கல் ஆகிய காய்கறிகள் முறையே ரூ.12, ரூ.20, ரூ.25 என சற்று அதிகரித்துள்ளது.பீன்ஸ் ரூ.120, அவரைக்காய் ரூ.60, புடலங்காய் ரூ.40, பாகற்காய் ரூ.40, சாம்பார் வெங்காயம் ரூ.40, வெண்டைக்காய் ரூ.30, பீட்ரூட் ரூ.30, கேரட் ரூ.30, கத்தரிக்காய் ரூ.25, முருங்கைக்காய் ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.20, பெரிய வெங்காயம் ரூ.18-க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறும்போது, “கடும் வெயில், மழை இருந்தாலும் காய்கறிகள் வரத்து பாதிக்கப்படவில்லை. அதனால், சாமானிய மக்களை பாதிக்கும் வகையில் காய்கறி விலை கடுமையாக உயரவில்லை. வரும் நாட்களில் மழை வாய்ப்பு அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன் காரணமாக காய்கறி விலை உயரக்கூடும்” என்றனர்.

காய்கறி விலை நிலவரம் கண்காணிப்பு குறித்து தோட்டக்கலை துறை இயக்குநர் பி.குமரவேல் பாண்டியனிடம் கேட்டபோது, “தோட்டக்கலை துறை அதிகாரிகள் தற்போது தினமும் காலையில் முதல் வேலையாக கோயம்பேடு, ஒட்டன்சத்திரம், கிருஷ்ணகிரி, நெல்லூர் உள்ளிட்ட சந்தைகளில் காய்கறி விலையை ஆய்வு செய்து வருகின்றனர். அதன் பிறகே மற்ற பணிகளை மேற்கொள்கின்றனர். தற்போது வெப்பத்தில் இருந்து பயிர்களை பாதுகாக்க தோட்டக்கலை துறை சார்பில் நிழல் தரும் வலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. காய்கறி விலையில் வழக்கத்துக்கு மாறாக திடீர் விலை உயர்வு எதுவும் இதுவரை இல்லை. எனினும், விலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்றார்.

 

 

 

 

 

 

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க