tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

ஜம்மு, செப். 8–

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், 90 தொகுதிகள் அடங்கிய சட்டசபைக்கு வரும் 18, 25 மற்றும் அக்.1 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை அக். 8ல் நடக்கிறது. 

இந்த தேர்தலில், பாஜ தனித்து போட்டியிடுகிறது. தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது.

இந்நிலையில், ஜம்முவின் பலாரு பகுதியில் நேற்று நடந்த பாஜ கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: 

 ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதம், தன்னாட்சி ஆகியவை புத்துயிர் பெறுவதையும், பாஜஅரசால் இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட குஜ்ஜார்கள், பஹாரிகள், பேகர்வால்கள், பட்டியலினத்தவர்கள் என எந்த சமூகத்துக்கும் அநீதி இழைக்கப்படுவதை, மத்திய அரசு அனுமதிக்காது.

ஜம்மு – காஷ்மீரில் நடக்க உள்ள சட்டசபை தேர்தல் வரலாற்று சிறப்புமிக்கது. ஏனென்றால், முந்தைய நடைமுறையான இரண்டு தேசியக் கொடி, இரண்டு அரசியலமைப்பு போல் இல்லாமல், ஒரே தேசியக் கொடி, ஒரே அரசியல் சட்டத்தின் கீழ் சட்டசபை தேர்தல் முதல் முறையாக நடக்க உள்ளது. 

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, நமக்கு ஒரே பிரதமர் தான் இருக்கிறார். அவர் நரேந்திர மோடி. ஜம்மு – காஷ்மீரில், தீவிரவாததத்தை 70 சதவீதம், மத்திய அரசு அழித்துவிட்டது. தேசிய மாநாட்டு கட்சி -– காங்கிரஸ் கூட்டணி, ஜம்மு காஷ்மீரை மீண்டும் தீவிரவாத நெருப்புக்குள் தள்ள முயற்சி செய்கிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்தால், காஷ்மீரில் தீவிரவாதம் மீண்டும் தலைவிரித்தாடும் இது இந்தியாவின் பாதுகாப்புக்கே ஆபத்தாகிவிடும். 

ஜம்மு – காஷ்மீரை 3 குடும்பங்கள் மட்டுமே சீரழிக்க எண்ணுகிறது. காங்கிரசின் சோனியா குடும்பம், தேசிய மாநாட்டு கட்சியின் அப்துல்லா குடும்பம், மக்கள் ஜனநாயக கட்சியின் முப்தி குடும்பம் ஆகியவை, மாநிலத்தை மீண்டும் ஊழல் சகாப்தத்துக்கு கொண்டு செல்ல முயற்சி செய்கின்றன. இங்கு பழைய நடைமுறைகளை கொண்டு வருவோம் என்கின்றனர். சுயாட்சி கொண்டு வருவது குறித்து பேசுகின்றனர். காஷ்மீருக்கு சுயாட்சி வழங்குவது குறித்து, எந்த சக்தியாலும் பேச முடியாது.

ஜம்மு – காஷ்மீருக்கு இனி ஒரு போதும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படமாட்டாது. ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் அதிகாரரம், மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது. அப்படியிருக்கையில், இந்த கட்சிகளால் எப்படி மாநில அந்தஸ்து வழங்க முடியும்? 370வது சட்டப்பிரிவை அமல்படுத்த முடியும். மாநில அந்தஸ்து வழங்குவோம் என, கொடுத்த வாக்குறுதியை, பிரதமர் மோடி நிச்சயம் நிறைவேற்றுவார். 

பாகிஸ்தானுடன் பேச வேண்டும் என, தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

ஆனால், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்தாதவரை, காஷ்மீரில் அமைதி நிலவும் வரை, அந்நாட்டுடன் பேசுவது என்பதற்கே இடமில்லை. 

ஜம்மு – காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்தான் முதல்முறையாக, லோக்சபா தேர்தலில் ஓட்டு சதவீதம் அதிகரித்தது. 

யூனியன் பிரதேசத்தில் பாஜ ஆட்சி அமைக்க நமது வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்யுங்கள்.” இவ்வாறு அமித் ஷா பேசினார்.

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க