tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சேலம், மே 4

ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசு நிவாரண உதவியை உடனடியாக ழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

ஏற்காடு மலைப்பாதையில் கடந்த 30 -ந் தேதி மாலை 60 அடி பள்ளத்தில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். 50 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவர்களை அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏற்காடு பஸ் விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரண உதவியை உடனடியாக வழங்கவேண்டும். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

தி.மு.க. அரசு 2021 -2022 ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 5 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்குவதாக அறிவித்தனர். 2022 -23-ல் ஆயிரம் பஸ்கள் வாங்குவதாக அறிவித்தனர். எனக்கு தெரிந்து 400 முதல் 500 பஸ்கள் வரை மட்டுமே புதியதாக வாங்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகால அண்ணா தி.மு.க. ஆட்சியில் 14 ஆயிரத்து 500 புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. அரசு பஸ்கள் பழுதடைந்து விட்டது. அரசு பஸ்களில் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கிறார்கள். சில நேரங்களில் மழைகாலங்களில் பஸ்சில் ஒழுகுகிறது. மின்சார பஸ் ஜெர்மன் நாட்டுன் அண்ணா தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

மதுபான வருமானத்தில்

தான் கவனம்

வறட்சியின் காரணமாக பொது மக்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். ஆனால் இந்த அரசு மதுபான வருமானத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

கோடைகாலத்தில் மின்தேவை அதிகரிக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

அத்திக்கடவு அவினாசி திட்டம் அண்ணா தி.மு.க. ஆட்சிகாலத்தில் 85 சதவீதம் நிறைவுற்ற நிலையில் இன்னும் அந்த திட்டம் நிறைவு பெற வில்லை. அதேபோல் சேலம் மாவட்டத்திலும் அண்ணா தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஏராளமான திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.

கால்நடை பூங்காவை

ஏன் திறக்கவில்லை

அண்ணா தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து இருந்தாலே தற்போது கோடை காலத்தில் அந்த நீரை பயன்படுத்தி இருக்கலாம்.

ரூ. 1000 கோடியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் பூட்டி கிடக்கிறது. இதை இதுவரை திறக்கவில்லை.

ஒற்றை செங்கல் உதயநிதி ஆயிரகணக்கான செங்கலால் கட்டப்பட்ட இந்த பூங்காவை ஏன் திறக்க வில்லை. அண்ணா தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் என்பதால் இதை முடக்கி விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க