tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுக்குடி கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ சௌந்திர நாயகி அம்பிகை சமேத ஶ்ரீ தான்தோன்றீஸ்வர ஸ்வாமி ஸ்ரீ பிரம்ம சன்டேஸ்வரர் ஸ்ரீ அஷ்ட புஜ கால பைரவர் ஆலயத்தில் அஷ்ட பைரவ மஹா யாகம் நடைபெற்றது.
கார்த்திகை மாதம் வரக் கூடிய அஷ்டமி ஜென்மாஷ்டமியை எனவும் காலபைரவாஷ்டமி என பெயர் பெற்றது.
அதனையொட்டி வருடாந்தோறும் மூன்று நாட்கள் நான்கு கால மஹா யாகமாக நடைபெறுவது வழக்கம் அதன் படி இந்த வருடம் கார்த்திகை மாதம் 6,7,8ந்தேதியான  21.11.2024 முதல் 23.11.2024 வியாழன், வெள்ளி, சனி கிழமை மூன்று தினங்கள் நான்கு கால யாக பூஜைகளாக நடைபெற்று மஹாபூர்ணாஹூதி நடைப்பெறும்   மேலும் அஷ்டபுஜ கால பைரவருக்கு மஹா அபிஷேகம் நடைபெறும் அதன் படி நேற்று இரவு முதல் கால யாக பூஜை நடைபெற்று அஷ்ட புஜ கால பைரவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து உற்சவ மூர்த்தி வீதியுலா காட்சியும் நடைபெற்று மஹா தீபாராதனை நடைபெற்றது.
அதன் பிறகு பக்தர்களுக்கு அருட் பிரசாதங்களும் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
மேலும் பக்தர்களுக்கு சுவாமி பாதத்தில் வைத்து பூஜிக்கபட்ட சிகப்பு கையிறு கையில் கட்டப்பட்டது.
அஷ்ட பைரவ மஹா யாகத்தை பைரவப்ரியன் கயிலைஸ்ரீ சேங்காலிபுரம் பைரவசித்தர் சிவஸ்ரீ ஹரி ஹர சிவாச்சாரியார் ஏற்பாட்டில் நடைபெற்றது. மேலும் ஆலய அர்ச்சகர் பைர சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் மற்றும் சர்வசாதகமாக கும்பாபிஷேக சக்ரவர்த்தி திருக்கண்ணங்குடி பாலாமணி சிவாச்சாரியார் அவருடன் கணேஷ்குமார் சிவாச்சாரியார் நடத்தினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக திருவாரூர் கமாலம்பிகா கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.டி.மூர்த்தி குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குறிப்பாக மூன்று தினங்களும் பக்தர்களுக்கு அன்னதானமும் கையில் சிகப்பு முடிக்கயிறு கட்டும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராசி பலன்

பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உருவாகும். எதிலும் பற்றற்ற தன்மை உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். சிந்தனையின் போக்கில் புதுமைகள் பிறக்கும். கடினமான வேலைகளையும் எளிமையாகச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான... மேலும் படிக்க

அரசு சார்ந்த பணிகளில் துரிதம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மனைவி வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மனவள கலையில் நாட்டம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் மரியாதை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் எண்ணங்கள் ஈடேறும்.... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். பூர்வீகத்தில் இருந்துவந்த  பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். இடமாற்றம் தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய தொழில்நுட்பக் கருவிகள் வாங்குவீர்கள்.... மேலும் படிக்க

விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். புதிய முயற்சிகளால் அலைச்சல் உண்டாகும். விளையாட்டுக்களில் கவனத்துடன் செயல்படவும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். புதிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.... மேலும் படிக்க

ஆடம்பர எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். தோற்றப் பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உங்கள்... மேலும் படிக்க

மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். வாகனப் பழுதுகளைச் சீர் செய்வீர்கள். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப அனுகூலம்... மேலும் படிக்க

பணி நிமித்தமான புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பழைய பிரச்சனைகள் குறையும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் உருவாகும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்புத்... மேலும் படிக்க

வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும்.... மேலும் படிக்க

வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் தெளிவுகள் உண்டாகும். வியாபார பணிகளில் ஒரு விதமான மந்தத்தன்மை உண்டாகும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.... மேலும் படிக்க


எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதளவில் குழப்பங்கள் ஏற்படும். செயல்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனம் வேண்டும்.... மேலும் படிக்க

வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு மேம்படும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய செயல்கள் சாதகமாக முடியும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும்.... மேலும் படிக்க

ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசுப் பணிகளில் ஆதாயம் ஏற்படும். தன நெருக்கடிகள் குறையும். மாறுபட்ட அணுகுமுறைகளால் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகள் மூலம் சில விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.... மேலும் படிக்க