tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திண்டுக்கல்,  நவ. 23–
கடந்த காலங்களில் அதிமுகவுடன் கூட்டணிக்கு வர எந்த கட்சி எவ்வளவு பணம் கேட்டார்கள்? நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்பதை, அதிமுக முன்னாள் அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் வெளிப்படையாக சொல்ல வேண்டும், பொத்தாம் பொதுவாக பேசக் கூடாது என சிபிஎம் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் காட்டமாக கூறியுள்ளார். 
    திண்டுக்கல்லில் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: 
     அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களிடம் அதானி 2,200 கோடி லஞ்சம் கொடுத்து தான் முதலீட்டை பெற்றுள்ளார். இது தொடர்பாக அமெரிக்காவில் நீதிமன்றம் அதானி அவர் மருமகன் உட்பட ஏழு பேர் மீது பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இவ்வளவு பெரிய முறைகேட்டை நடந்ததை அங்குள்ள பங்கு மார்க்கெட் நிறுவனம் கண்டு பிடித்துள்ளது ஆனால் இந்தியாவில் உள்ள சிபிஐயையோ அமலாக்கத்துறையோ கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசு ஏன் இவ்வளவு பெரிய முறைகேட்டை இவர்கள் கண்டு பிடிக்கவில்லை. 
    அதானி என்பது முகம் தான் பின்னால் இருப்பதும் நரேந்திர மோடி தான். நரேந்திர மோடியின் பினாமியாக இருப்பதால் தான் அதானி மீது எவ்வளவு பெரிய ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும் மோடி அரசாங்கம் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. அவர்களுக்கு சம்மன் அனுப்புவதில்லை. விசாரணைக்கு கூட அழைப்பது இல்லை.  சம்பவம் நடந்தது இந்தியாவில் லஞ்சம் கொடுத்தது வாங்கினது எல்லாம் இந்தியாவில் தான். மத்திய அரசு உடனடியாக அதானியை கைது செய்ய வேண்டும். முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். 
யாருக்கு கொடுத்தீங்க...
     திருச்சியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் பொழுது கூட்டணி கட்சிகளுக்கு சீட்டு மற்றும் கோடிக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என பேசியுள்ளார். கூட்டணிக்கு வருபவர்கள் பணம் கேட்பார்கள்.. சீட்டு கேட்பார்கள் என்ன பொத்தாம் பொதுவாக சொன்னால் இதற்கு என்ன அர்த்தம்? உங்களிடம் யார் பணம் கேட்டார்கள் என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். ஏன் தயங்குகிறீர்கள்?
 பொத்தாம் பொதுவாக சொன்னால் எப்படி நம்பகத் தன்மையாக இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதிமுக இரண்டும் பெரிய கட்சிகளாக இருந்தாலும் கூட்டணி இல்லாமல் அந்த கட்சிகளை வெற்றி பெறுவது ஆட்சிக்கு வருவது முடியாத காரியம். அப்படி சூழல் இல்லை. யார் பணம் கேட்டார் நீங்க எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ராசி பலன்

பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உருவாகும். எதிலும் பற்றற்ற தன்மை உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். சிந்தனையின் போக்கில் புதுமைகள் பிறக்கும். கடினமான வேலைகளையும் எளிமையாகச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான... மேலும் படிக்க

அரசு சார்ந்த பணிகளில் துரிதம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மனைவி வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மனவள கலையில் நாட்டம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் மரியாதை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் எண்ணங்கள் ஈடேறும்.... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். பூர்வீகத்தில் இருந்துவந்த  பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். இடமாற்றம் தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய தொழில்நுட்பக் கருவிகள் வாங்குவீர்கள்.... மேலும் படிக்க

விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். புதிய முயற்சிகளால் அலைச்சல் உண்டாகும். விளையாட்டுக்களில் கவனத்துடன் செயல்படவும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். புதிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.... மேலும் படிக்க

ஆடம்பர எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். தோற்றப் பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உங்கள்... மேலும் படிக்க

மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். வாகனப் பழுதுகளைச் சீர் செய்வீர்கள். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப அனுகூலம்... மேலும் படிக்க

பணி நிமித்தமான புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பழைய பிரச்சனைகள் குறையும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் உருவாகும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்புத்... மேலும் படிக்க

வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும்.... மேலும் படிக்க

வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் தெளிவுகள் உண்டாகும். வியாபார பணிகளில் ஒரு விதமான மந்தத்தன்மை உண்டாகும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.... மேலும் படிக்க


எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதளவில் குழப்பங்கள் ஏற்படும். செயல்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனம் வேண்டும்.... மேலும் படிக்க

வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு மேம்படும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய செயல்கள் சாதகமாக முடியும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும்.... மேலும் படிக்க

ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசுப் பணிகளில் ஆதாயம் ஏற்படும். தன நெருக்கடிகள் குறையும். மாறுபட்ட அணுகுமுறைகளால் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகள் மூலம் சில விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.... மேலும் படிக்க