tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, மே 22

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தவர்களையே தாக்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக மதுரையைச் சேர்ந்த காவல் சப் இன்ஸ்பெக்டருக்கு மனித உரிமைகள் ஆணையம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

மதுரை, அனுப்பானடியை சேர்ந்த வி.சம்பத்குமார், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், “என் சகோதரி கணவர் பால்ராஜ், என் பாட்டி காமாட்சி அம்மாளிடம் தொடர்ச்சியாக தகராறு செய்து வந்தார். இது தொடர்பாக மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகாரளித்தோம். ஆனால், காவல் நிலையத்துக்கும், சப் இன்ஸ்பெக்டர் சி.சக்தி மணிகண்டனின் வீட்டுக்கும் பால்ராஜ் சம்பளம் பெறாமல் வேலை செய்வதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி எனது பாட்டியை பால்ராஜ் தாக்கினார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் காவல் ஆணையரிடம் புகார் அளிப்போம் என எனது சகோதரர் உள்ளிட்டோர் காவல்நிலையம் சென்று வலியுறுத்தி வந்தோம். அன்றைய தினம் இரவு எங்கள் வீட்டுக்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் சக்தி மணிகண்டன் எனது சட்டையைப் பிடித்து இழுத்து அவதூறாக பேசி என்னையும் சகோதரரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு லத்தி போன்றவற்றை வைத்து கை, கண்கள் போன்ற உறுப்புகளில் கடுமையாக தாக்கி, வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கி வழக்குப்பதிவு செய்தனர். மேலும், என் பாட்டியிடம் ரூ.4,500 பணத்தையும் எனது ஆதார் அட்டை உள்ளிட்டவற்றையும் வாங்கிவைத்துக் கொண்டு, பால்ராஜ் மீது இனியும் புகாராளித்தால் பொய் வழக்கு பதிந்து எதிர்காலமே இல்லாமல் செய்துவிடுவதாகவும், சிகிச்சை பெற மருத்துவமனைக்குச் செல்லக் கூடாது எனவும் மிரட்டியும் அனுப்பினர். ஆனால் வலி தாங்காத நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அட்மிட்டாகி நாங்கள் சிகிச்சை பெற்ற போது அங்கு வந்த காவலர் ஒருவர் எங்களை வீட்டுக்கு செல்லும்படி மிரட்டினார். மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனிவில் கோரி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஆணைத்தின் உறுப்பினர் வி.கண்ணதாசன், “ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை வைத்துப் பார்க்குபோது சப் இன்ஸ்பெக்டர் மனுதாரரை தாக்கியது உறுதியாகிறது. எனவே, மனுதாரருக்கு ஒரு மாதத்துக்குள்ளாக ரூ.50 ஆயிரத்தை இழப்பீடாக தமிழக அரசு வழங்கிவிட்டு அந்தத் தொகையை உதவி ஆய்வாளர் சக்தி மணிகண்டனிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம்” என உத்தரவிட்டார்.

 

 

 

 

 

 

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க