tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மைசூர், ஜூலை 30–-

‘‘ காவிரி, எங்கள் தண்ணீர். அதை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம். எங்கள் தண்ணீரை பாதுகாக்கமேகதாது அணை கட்ட அனுமதிக்குமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சரை கைகூப்பி வேண்டியதாக கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி குமாரசாமி கூறினார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவரும், மத்திய உருக்கு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சருமான குமாரசாமி கூறியதாவது:

மத்திய பட்ஜெட்டில் கர்நாடகாவுக்கு எந்த பாரபட்சமும் காட்டவில்லை. சுருக்கமான பட்ஜெட் உரையில் அனைத்து மாநிலங்களையும் அமைச்சர் குறிப்பிட முடியாது. மத்திய அரசை குறை கூறுவதிலேயே மாநில அரசு குறியாக இருக்க கூடாது. தேவையான உதவிகளைப்பெற மத்திய அரசுடன் மாநில அரசு நல்லுறவை பேண வேண்டும். நான் கர்நாடகா முதல்வராக இருந்தபோது, குடகு பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அப்போது, மாநிலத்துக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், உதவத் தயார் என்றார் பிரதமர் மோடி. 

எங்கள் தண்ணீர்

நாடாளுமன்றத்தில் மாநிலத்துக்காக குரல் கொடுத்து மேகதாது திட்டத்துக்கு ஒப்புதல் பெற எம்பிக்கள் தவறிவிட்டனர் என்ற காங்கிரஸ் தலைவர்களின் கருத்தை மறுக்கிறேன். முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் நானும் நமது நீரைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம். இந்த வயதிலும் ராஜ்யசபாவில், காவிரி நீரை காக்க வேண்டும் என தேவகவுடா குரல் கொடுக்கிறார். இந்த பிரச்னையில் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் குரல் கொடுத்தாரா? எங்களுடைய தண்ணீரை பாதுகாக்க மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்குமாறு நானும், என்னுடைய தந்தையும் (தேவகவுடாவும்) பிரதமர் மோடி, ஜலசக்தி அமைச்சரை சந்தித்து கைகூப்பி வேண்டிக் கொண்டோம். மேகதாது அணை தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச, ஒரு பிரதிநிதிகள் (துாதுக்) குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும். மாநிலத்தின் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் காவிரி ஆற்றின் கீழ் ஓடைகளில் கட்டப்பட உள்ள சமச்சீர் நீர் தேக்க தொட்டி(மேகதாது அணை)க்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று ஸ்டாலினை அந்த பிரதிநிதிகள் குழு கேட்டுக் கொள்ள வேண்டும். பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது என்பது பார்லிமென்ட்டில் குரல் கொடுப்பது மட்டுமல்ல;அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இது என்னுடைய சொந்த அனுபவம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

++++

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க