tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

நார்வே செஸ் தொடரின் கடைசி சுற்றில் வெற்றிப் பெற்ற மேக்னஸ் கார்ல்சன் ஆறாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

நார்வேயில் நடைபெற்ற சர்வதேச செஸ் தொடரில் ஐந்து முறை உலக சாம்பியன் வென்ற மேக்னஸ் கார்ல்சன் (நார்வே), நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் (சீனா), இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

10 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில், ஆடவர் பிரிவில் மேக்னஸ் கார்ல்சென் 17.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். கடைசி சுற்றில் அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவிடம் மோதிய கார்ல்சென் கிளாசிக்கல் கேமில் டிரா ஆகி ஆர்கமெடானுக்கு சென்றது.

அதில் வென்ற கார்ல்சென் நார்வே செஸ் சாம்பியன் பட்டத்தை 6ஆவது முறையாகக் கைப்பற்றினார். கார்ல்சென் 17.5 புள்ளிகளுடன் முதலிடம் நகமுரா 15.5 புள்ளிகளுடன் 2ஆவது இடமும் இந்தியாவின் பிரக்ஞானந்தா 14.5 புள்ளிகளுடன் 3ஆவது இடமும் பிடித்துள்ளனர். நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு முதன்முறையாக நார்வே செஸ் கிளாசிக்கல் கேமில் பட்டம் வென்ற கார்ல்சென் தொடர்ந்து 2019, 2020, 2021, 2022, 2024இல் பட்டம் வென்றுள்ளார். இடைப்பட்ட 2023ஆம் ஆண்டில் மட்டும் ஹிகரு நகமுரா பட்டத்தை வென்றார்.

மகளிர் பிரிவில் சீனாவின் ஜு வென்ஜுன் 19 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் பெற்றார்.

மகளிர் பிரிவில் இந்தியாவின் வைஷாலி 12.5 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும், கொனேரு ஹம்பி 10 புள்ளிகளுடன் 5ஆவது இடமும் பிடித்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களின் சந்திப்புகள் மனதிற்கு ஒருவித மாற்றத்தை உருவாக்கும். வியாபார பணிகளில் இழுபறிகள் குறைந்து லாபங்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் பேசும்பொழுது கருத்துக்களில் கவனம் வேண்டும். தனவரவுகளில்... மேலும் படிக்க

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சமூகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். துறை நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். வாகன வசதிகள் மேம்படும். அரசுப் பணிகளில் அனுகூலம்... மேலும் படிக்க

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். தடைப்பட்ட பணிகள் முடியும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு மேம்படும். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். பணி தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதளவில் நினைத்த... மேலும் படிக்க

எதிலும் அவசரப்பட்டு செயல்படுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களிடம் வளைந்து கொடுத்து செல்வது நல்லது. வரவேண்டிய வரவுகள் தாமதமாக கிடைக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில பொறுப்புகளால்... மேலும் படிக்க

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களுடன் சிறுதூர பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். தன வரவுகள் திருப்தியாக இருக்கும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய துறைகளில்... மேலும் படிக்க

கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குருமார்களின் சந்திப்புகள் ஏற்படும். வழக்கு சார்ந்த செயல்களில் சில மாற்றம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். பொது வாழ்வில் சில மாற்றமான தருணங்கள்... மேலும் படிக்க

குடும்ப வருமானத்தை மேம்படுத்துவீர்கள். அக்கம், பக்கம் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புது விதமான எண்ணங்கள் பிறக்கும். சக ஊழியர்கள் இடத்தில் நிதானம் வேண்டும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள்.... மேலும் படிக்க

உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தொழில் நிமித்தமான தொடர்புகள் அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோக பணிகளில்... மேலும் படிக்க

அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். தன்னம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் காணப்படும்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் மறைமுகமான ஆதரவுகள் கிடைக்கும். நண்பர்கள் வழியில் விரயங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உபரி வருமானம் மேம்படும். பொன், பொருள் பற்றிய சிந்தனைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் அலைச்சல் உண்டாகும்.... மேலும் படிக்க

முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உறவுகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். வர்த்தக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். சக ஊழியர்கள் இடத்தில் விவேகம் வேண்டும். தவறிய சில... மேலும் படிக்க

கடன் சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்புகள் குறையும். உடல் நலத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் மனதளவில் சில குழப்பம் தோன்றி மறையும். பணிகளில் சூழ்நிலை அறிந்து... மேலும் படிக்க