tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

 

சென்னை, பிப்.1

தமிழ்நாடு அரசுக்கு எதிராகவே கவர்னர் தொடர்ந்து செயல்படுகிறார். அவரது செயல்பாடு திமுக ஆட்சிக்கு சிறப்பு சேர்ப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் வீட்டுவசதி, நகராட்சி நிர்வாகம், எரிசக்தி, மருத்துவம், உள்துறை சார்பில் 2-ம் கட்டமாக ரூ.1,383 கோடி மதிப்பில் 79 புதிய திட்டப் பணிகள் தொடக்கம் மற்றும் 29 முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

 

திரு.வி.க. நகர் கன்னிகாபுரம் விளையாட்டு மைதான பணிகளை நேரில் பார்வையிட்டார். கணேசபுரம் மேம்பால பணி, 776 புதிய குடியிருப்பு கட்டுமானப் பணி, தண்டையார்பேட்டை பேருந்து நிலைய பணி பார்வையிட்டு வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கன்னிகாபுரம் பகுதியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ரூ.44.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் மற்றும் குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் திறந்து வைத்தார்.

பேட்டி

பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: 

 வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகளை நான் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன். வடசென்னை வளர்ந்த சென்னையாக ஓராண்டு காலத்திற்குள் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கவர்னர் செயல்பாடு

  எல்லா பிரச்சினையிலும் அரசுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார். அது எங்களுக்கு நல்லது தான். தொடர்ந்து கவர்னர் இதை செய்ய வேண்டும். கவர்னர் இவ்வாறு செயல்பட செயல்பட எங்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் வேகம் வருகிறது. கவர்னரின் செயல்பாடு திமுக ஆட்சிக்கு சிறப்பு சேர்க்கிறது.

 துணைவேந்தர் நியமனத்தில் கவர்னர் முடிவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. எனவே அது தொடர்பாக கருத்து சொல்ல இயலாது. 

மரியாதை தர முடியாது

பெரியார் பற்றி மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு எல்லாம் நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை. பெரியார் தான் எங்களுடைய தலைவர். தலைவர்களுக்கெல்லாம் தலைவர் பெரியார். பெரியார் குறித்த விமர்சனத்தை பொருட்படுத்த தயாராக இல்லை.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்கள் தமிழகம் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டிருப்பதாக வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்படுகிறது. அங்கொன்று இங்கொன்றுமாக சில தவறுகள் நடைபெறுவதை பெரிதாக்கி பூதாகரமாக்கி எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு விஷயத்தில் அரசியல் செய்கிறார்கள். இதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து தொழிற்சாலைகள் தொடர்ந்து தமிழகத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

ராசி பலன்

நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களின் சந்திப்புகள் மனதிற்கு ஒருவித மாற்றத்தை உருவாக்கும். வியாபார பணிகளில் இழுபறிகள் குறைந்து லாபங்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் பேசும்பொழுது கருத்துக்களில் கவனம் வேண்டும். தனவரவுகளில்... மேலும் படிக்க

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சமூகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். துறை நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். வாகன வசதிகள் மேம்படும். அரசுப் பணிகளில் அனுகூலம்... மேலும் படிக்க

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். தடைப்பட்ட பணிகள் முடியும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு மேம்படும். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். பணி தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதளவில் நினைத்த... மேலும் படிக்க

எதிலும் அவசரப்பட்டு செயல்படுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களிடம் வளைந்து கொடுத்து செல்வது நல்லது. வரவேண்டிய வரவுகள் தாமதமாக கிடைக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில பொறுப்புகளால்... மேலும் படிக்க

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களுடன் சிறுதூர பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். தன வரவுகள் திருப்தியாக இருக்கும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய துறைகளில்... மேலும் படிக்க

கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குருமார்களின் சந்திப்புகள் ஏற்படும். வழக்கு சார்ந்த செயல்களில் சில மாற்றம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். பொது வாழ்வில் சில மாற்றமான தருணங்கள்... மேலும் படிக்க

குடும்ப வருமானத்தை மேம்படுத்துவீர்கள். அக்கம், பக்கம் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புது விதமான எண்ணங்கள் பிறக்கும். சக ஊழியர்கள் இடத்தில் நிதானம் வேண்டும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள்.... மேலும் படிக்க

உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தொழில் நிமித்தமான தொடர்புகள் அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோக பணிகளில்... மேலும் படிக்க

அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். தன்னம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் காணப்படும்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் மறைமுகமான ஆதரவுகள் கிடைக்கும். நண்பர்கள் வழியில் விரயங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உபரி வருமானம் மேம்படும். பொன், பொருள் பற்றிய சிந்தனைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் அலைச்சல் உண்டாகும்.... மேலும் படிக்க

முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உறவுகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். வர்த்தக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். சக ஊழியர்கள் இடத்தில் விவேகம் வேண்டும். தவறிய சில... மேலும் படிக்க

கடன் சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்புகள் குறையும். உடல் நலத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் மனதளவில் சில குழப்பம் தோன்றி மறையும். பணிகளில் சூழ்நிலை அறிந்து... மேலும் படிக்க