tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

துறையூர், நவ. 25–
கூட்டணி அமைப்பதற்கே பணம் கேட்கும் மோசமான நிலை  அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி கூறினார். திருச்சி துறையூர் பஸ் நிலையம் முகப்பில், முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்து, துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
தமிழக முழுவதும் தலைவர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து, அவரது பெயரில் நலத்திட்டங்களை செயல்படுத்தி, அவரது கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறோம். 
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி, அனைத்து திட்டங்களுக்கும் கருணாநிதி பெயர் வைப்பதாக கூறுகிறார். 
நல்ல திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைக்காமல், கரப்பான் பூச்சி பெயரையா வைக்க முடியும். யார் கரப்பான் பூச்சி என்று தி.மு.க.,வினருக்கு தெரியும். 
பழனிசாமி தகுதி
மேலும், எந்த தகுதியை வைத்து உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தீர்கள் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். 

எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமிக்கு இருக்கும் தகுதி, அவர் சொல்லும் தகுதி எனக்கு கிடையாது என்பதை ஒத்துக் கொள்கிறேன். நான் யார் காலிலும் விழுந்து, இந்த பொறுப்புக்கு வரவில்லை. எத்தனையோ பொறுப்புகள் இருந்தாலும், உங்கள் வீட்டுப் பிள்ளையாக, கருணாநிதியின் பேரனாக இருப்பது தான் பெருமை.
கடந்த லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது போல், வரும் சட்டசபை தேர்தலிலும் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு இப்போதே தேர்தல் பணிகளை செய்ய துவங்குவோம். 
கேவலம்

கடந்த சில நாட்களுக்கு முன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘அ.தி.மு.க.,வுடன்ு கூட்டணிக்கு வாருங்கள் என்று அழைத்தால், ஒருத்தன் 100 கோடி வேண்டும் என்றும், ஒருத்தன் 20 தொகுதி வேண்டும் என்றும் கேட்கின்றனர்’ என பொதுக் கூட்டத்திலேயே பேசியிருக்கிறார். இது போன்ற கேவலமான நிலை அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. 
வரும் 2026ல் நடைபெறும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கப் போவது தி.மு.க.,தான். 
இவ்வாறு உதயநிதி பேசினார்.

ராசி பலன்

திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து... மேலும் படிக்க

இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். பணி நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில்... மேலும் படிக்க

திட்டமிட்ட பணிகள் முடிவு பெறும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பணிபுரியும்... மேலும் படிக்க

எந்த ஒரு செயலிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தாய் வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். சிறு வணிகம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். வியாபாரப் பணிகள் மத்திமமாக நடைபெறும்.... மேலும் படிக்க

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள்... மேலும் படிக்க

சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் காணப்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால்... மேலும் படிக்க

குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். அரசு காரியத்தில் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். சமுகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். வியாபாரத்தில் இலாபம் மேம்படும். வித்தியாசமான மின்னணு... மேலும் படிக்க

பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்களில் வேகம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களைச் சீரமைப்பீர்கள். ஆன்மிகப் பணிகளில்... மேலும் படிக்க

திருப்பணி விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில இடமாற்றம் நேரிடலாம். கணவன்,மனைவிக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். உழைப்பிற்கு உண்டான... மேலும் படிக்க

நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடி ஏற்படும்.  வெளிப்படையான பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. பணியில் மறைமுகமான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். ஆவணம்... மேலும் படிக்க

துணைவர் வழியில் மதிப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சமூகப்... மேலும் படிக்க