tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருவனந்தபுரம், அக்.16 –
கேரளாவில் சிபிஎம் மாவட்ட பஞ்சாயத்து தலைவி புகார் கூறியதால் கூடுதல் கலெக்டர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி நடக்கிறது.  இங்கு கண்ணூர் கூடுதல் கலெக்டர் பதவி வகித்து வந்தவர், நவீன்பாபு.  இவர் இடமாற்றம் செய்யப்பட்டார். இதையொட்டி  அவருக்கு கண்ணூர் கலெக்டர் தலைமையில் வழியனுப்பு விழா நடந்தது. இந்த விழாவில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவி பி.பி. திவ்யா அழைக்காமலேயே வந்து கலந்து கொண்டார். 
லஞ்சப் புகார்
     இந்த விழாவில், கூடுதல் கலெக்டர் நவீன்பாபு மீது திவ்யா ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினார். அவர் பேசும்போது, ‘‘நவீன்பாபுவுக்கு நினைவுப்பரிசு வழங்கும் வேளையில் நான் இருக்கக்கூடாது என்றுதான் விரும்பினேன். அதற்கு என்னிடம் உறுதியான காரணம் உண்டு. அது 2 நாளில் தெரிய வரும். செங்கலாயியில் ஒரு பெட்ரோல் நிலையம் அமைக்க தடையில்லா சான்றிதழ் பெற நான் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவர் போன் அழைப்புகளை ஏற்கவில்லை. அவர் கடைசியில்  போன் அழைப்பை எடுத்தபோது, விண்ணப்பத்தில் தவறேதும் இல்லை என்ற பட்சத்தில் தேவையானதை அவர் செய்ய வேண்டும் என்றேன். அவர் அந்த இடத்தில் வந்து கள ஆய்வு செய்யுமாறு கேட்டேன். நான் பின்னர் வந்து ஆய்வு செய்கிறேன் என கூறியவர், ஆய்வு நடத்திவிட்டு, அதில் சில பிரச்னைகள் இருக்கின்றன என்றார். ஆனால் இப்போது தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டதாக தெரிய வந்துள்ளது.  அது எப்படி வழங்கப்பட்டது என்று எனக்கு தெரியும். அவர் புதிய இடத்தில் பணியில் சேரும்போது சிறப்பாக செயல்பட வேண்டும்’’ என்று கூறினார். 
லஞ்சம் வாங்கிவிட்டு அவர்  இப்போது தடையில்லா சான்றிதழ் வழங்கியதாக அவர் சூசகமாக குறிப்பிட்டதாக தெரிகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
தற்கொலை
இந்த நிலையில் நவீன்பாபு நேற்று தனது வீட்டில்  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
ஆளும் கட்சியின் மாவட்ட பஞ்சாயத்து தலைவி கூறிய மறைமுக ஊழல் குற்றச்சாட்டால் அவர்  மன உளைச்சலில் தவித்ததாக அவரோடு பணியாற்றிய ஊழியர்களும், வருவாய் அதிகாரிகளும் கூறினர். அதன்காரணமாக, அவர்  தூக்கு  போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 
நவீன்பாபுவுக்கு மஞ்சுஷா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.  மஞ்சுஷா கூடுதல் தாசில்தாராக உள்ளார்.
நவீன்  பாபு தற்கொலை குறித்து   கண்ணூர் போலீஸ் கமிஷனர் அஜித்குமார் கூறுகையில், ‘‘ நவீன் பாபு தனது படுக்கை அறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை தொடர்பாக கடிதம் எதையும் விட்டுச்செல்லவில்லை. விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.
மாவட்ட பஞ்சாயத்து தலைவியின் குற்றச்சாட்டால் மன உளைச்சலில் கூடுதல் கலெக்டர் தற்கொலை செய்து கொண்டிருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
============

ராசி பலன்

திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து... மேலும் படிக்க

இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். பணி நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில்... மேலும் படிக்க

திட்டமிட்ட பணிகள் முடிவு பெறும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பணிபுரியும்... மேலும் படிக்க

எந்த ஒரு செயலிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தாய் வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். சிறு வணிகம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். வியாபாரப் பணிகள் மத்திமமாக நடைபெறும்.... மேலும் படிக்க

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள்... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க