tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஆக. 28–

சித்தம் கலங்கி விட்டால் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாது. அண்ணாமலை நல்ல மனநல மருத்துவரை அணுக வேண்டும் ’ என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

 

அவரது அறிக்கை:

 

அண்ணாமலை பா.ஜ., தலைவரானதும், கட்சிக்கு செலவு வைக்க மாட்டேன். என் செலவுகளை நானே பார்த்துக் கொள்வேன் என்று வீர வசனம் பேசினார். மாதந்தோறும் தன் குடும்ப செலவுகள், வீட்டு வாடகை, காருக்கான பெட்ரோல், உதவியாளர் மற்றும் பாதுகாவலர்களுக்கான சம்பளத்தை, நண்பர்கள் தருவதாகக் கூறினார். அவர்கள் பெயர்களை பட்டியலிட தயாரா? அண்ணாமலை ரிலீஸ் செய்த, ‘தி.மு.க., பைல்ஸ்’ என்னவாயிற்று?

 

அமைச்சர் தியாகராஜன் பேசியதாக வெளியிட்ட ஆடியோ, 30,000 கோடி ரூபாய் குறித்து அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு உட்பட பல விசாரணைகள், ‘சைலன்ட் மோடு’க்கு மாறியதன் மர்மம் என்ன? 2019 லோக்சபா தேர்தலின்போது, பிரதமர் மோடி மனுத்தாக்கல் செய்ய அழைத்ததாகவும், பழனிசாமி செல்ல மறுத்ததாகவும், தார்ப்பாயில் வடிகட்டிய பொய்யை, அண்ணாமலை கூறியுள்ளார்.

 

பழனிசாமி குறித்து சில ஆண்டுகளாக, தி.மு.க.,வினர் கக்கி வந்த விஷத்தை, அவர்களின் புது கொள்ளை கூட்டாளி அண்ணாமலை கூறியுள்ளார். வரும், 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு நான்காம் இடம் கூட கிடைக்காது என்று கூறியுள்ளார். அ.தி.மு.க., தகுதியை மக்கள் தீர்மானிப்பர். மக்களவைத்தேர்தலுக்கு முன், இந்த கட்சி வேறு ஒருவர் கைக்கு போய் விடும் என, ஆரூடம் சொன்னவர் தான் அண்ணாமலை.

 

அ.தி.மு.க.,வின் வரலாறு தெரியாத ஆக்டோபஸ் அண்ணாமலை, மனநலம் பாதிக்கப்பட்டது போல் பேசியுள்ளார். சித்தம் கலங்கியவர்களுக்கு என்ன பேசுகிறோம் எனத் தெரியாது. அவர்கள் பேசுவது மற்றவர்களுக்கும் புரியாது. எந்த உழைப்பும் இல்லாமல், சொட்டு வியர்வை சிந்தாத அண்ணாமலை, முதல்வர் கனவில் சித்தம் கலங்கியுள்ளார். அவர் மனநல மருத்துவரை அணுக வேண்டும். 

ஆக்டோபஸ் நஞ்சுக்கு மருந்து கிடையாது. அட்டைப்பூச்சி தன் எடையை காட்டிலும், 8 மடங்கு ரத்தத்தை உறிஞ்சும். அவற்றை போன்றுதான் அண்ணாமலையும் உள்ளார்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

***

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க