tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூன் 30–

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எதை மறைத்தோம் என்று சிபிஐ விசாரணை கேட்கிறார்கள். குறுகிய காலத்தில் குற்றவாளிகளை கைது செய்து ஒருவர் கூட தப்ப முடியாத நிலையை உருவாக்கி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: 

 

 நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியைப் பெற்ற பெருமிதத்துடன் இந்தப் பேரவைக்கு நாங்கள் வருந்துள்ளோம். நடைபெற்றது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் என்னைக் குறி வைத்தும், இந்த திராவிட மாடல் அரசை விமர்சித்தும்தான் தேர்தல் களத்தில் அதிகம் பேசினார்கள். திராவிட மாடல் ஆட்சியின் செல்வாக்கைக் குறைத்துக்காட்ட அவர்கள் செய்த உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை மக்கள் முறியடித்து, "செய்கூலி சேதாரம் இல்லாமல்" முழுமையான வெற்றியை வழங்கினார்கள். ஆளும் திமுக அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 

திசை திருப்பல் நாடகம்

 நான் ஆட்சிப் பொறுப்பேற்ற காலம் முதல், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் நாட்டு மக்களுக்கு நல்ல பல திட்டங்களைத் தீட்டி வந்துள்ளேன் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்ததன் அடையாளம்தான் இந்த 100 விழுக்காடு வெற்றி. அதனால்தான், மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள், நமது முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல், தினந்தோறும் இந்த அவைக்கு வந்து, அவையின் மாண்புக்கும் குந்தகம் விளைவித்து சென்றுவிட்டார்கள். 

இந்தத் தேர்தல் தோல்வியை மறைக்க அவர்கள் போட்ட சதித்திட்டம்தான், நடவடிக்கை எடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து கிளப்பியது. கடந்த 

19 ம் தேதி இந்த சம்பவத்தை நான் கேள்விப்பட்டதும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டேன். அது குறித்து இதே அவையில் 20 ம் தேதி முழுமையான அறிக்கையை தாக்கல் செய்துள்ளேன். ௨௪ மணி நேரத்தில் நடவடிக்கைகளை (பட்டியலிட்டார்) எடுத்துள்ளோம். இதன் பிறகும் நடவடிக்கைகள் சரியில்லை என்று சொல்வது, அவர்கள் நடத்தும் திசைதிருப்பல் நாடகம்.

எதையும் மறைக்கவில்லை

எதை மறைத்தோம் என்று சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள்? "சாத்தான்குளம் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கே சி.பி.ஐ. விசாரணை கேட்டீர்களே" என்று எதிர்க்கட்சித் தலைவர் பேட்டி அளித்திருக்கிறார். மனித உயிர்கள் இறந்து போனால், இரண்டு பேரா, இருபது பேரா என்று பார்ப்பது இல்லை. ஒரே ஒருவர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான். சாத்தான்குளம் சம்பவத்தை அன்றைய அ.தி.மு.க. அரசு முழுக்க முழுக்க மறைக்க, திரிக்க நினைத்தது. அதனால் அப்போது சி.பி.ஐ. விசாரணை கேட்டோம். ஆனால் இன்றைக்கு இந்த அரசு எதையும் மறைக்கவில்லை. குறுகிய காலத்திற்குள், குற்றவாளிகளைக் கைது செய்து, ஒருவர்கூட தப்ப முடியாது என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

 விஷச்சாராய விற்பனை என்பது ஒரு சமூகக் குற்றம். விலை மதிப்பில்லாத மனித உயிர்களை பலி வாங்குகிற இதை முற்றிலுமாக ஒழிக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. இனிமேல் எங்காவது கள்ளச்சாராய உயிர் பலி நடக்குமானால், அதற்கு அந்த மாவட்ட காவல் துறை அதிகாரியும், எல்லைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரியும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை மிகவும் கண்டிப்புடன் சொல்லியிருக்கிறேன்.  

அதைப்போலவே, போதைப் பொருள் நடமாட்டம் மற்றும் விற்பனையை முற்றிலுமாகத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். 

கொடநாடு வழக்கு

அடுத்து, மிக முக்கிய வழக்கான கொடநாடு வழக்கு குறித்து இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்த அவைக்குத் தெரிவிப்பதை எனது கடமையாகக் கருதுகிறேன். கொடநாடு வழக்கில், இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, எதிரிகள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 4 சிம் கார்டுகள் கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 8 ஆயிரம் பக்கம் கொண்ட ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது, எதிரிகள் சிலருக்கு வெளிநாட்டு போன் அழைப்புகள் வந்துள்ளது. எனவே, அதனை இண்டர்போல் உதவியுடன் விசாரிக்க வேண்டும். மேலும், சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம். சட்டம்-ஒழுங்கைக் காப்பதில் தமிழ்நாடு அரசு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. 

 காவல் துறையில் கடந்த மூன்றாண்டு காலத்தில் மொத்தம் 190 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் 179 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வருங்காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். 

100 அறிவிப்புகள் 

  இந்த ஆண்டு மானியக் கோரிக்கையில் 100 அறிவிப்புகள் உள்ளன. அவற்றில்சிலவற்றறை படிக்கிறேன். கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய போக்குவரத்துக் காவல் நிலையங்கள், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை புறக்காவல் நிலையம், படப்பை, ஆதமங்கலம்புதூர், திருப்பரங்குன்றம் கோவில் ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும். கொளத்தூர், கேளம்பாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும்.

 ஊர்க்காவல் படையில் பணியாற்றும் ஆளிநர்கள் உயிரிழக்கும்போது அவர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு ஊர்க்காவல் படை நலன் மற்றும் கருணைக் கொடை நிதியிலிருந்து வழங்கப்படும் இழப்பீடு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாகவும், காயமுற்றவர்களுக்கான நிதி 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 1,500 தற்காப்பு உடைகளும், மீட்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சிறிய உபகரணங்களுடன் கூடிய 3,000 மீட்பு உடைகளும் 4 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் வழங்கப்படும். 

 ஏரல், கருமத்தம்பட்டி, மடத்துக்குளம், கோவளம், படப்பை, திருநெல்வேலி மாநகரம், புதுவயல் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்கள் நிறுவப்படும். 

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

**********

ராசி பலன்

திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து... மேலும் படிக்க

இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். பணி நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில்... மேலும் படிக்க

திட்டமிட்ட பணிகள் முடிவு பெறும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பணிபுரியும்... மேலும் படிக்க

எந்த ஒரு செயலிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தாய் வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். சிறு வணிகம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். வியாபாரப் பணிகள் மத்திமமாக நடைபெறும்.... மேலும் படிக்க

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள்... மேலும் படிக்க

சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் காணப்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால்... மேலும் படிக்க

குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். அரசு காரியத்தில் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். சமுகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். வியாபாரத்தில் இலாபம் மேம்படும். வித்தியாசமான மின்னணு... மேலும் படிக்க

பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்களில் வேகம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களைச் சீரமைப்பீர்கள். ஆன்மிகப் பணிகளில்... மேலும் படிக்க

திருப்பணி விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில இடமாற்றம் நேரிடலாம். கணவன்,மனைவிக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். உழைப்பிற்கு உண்டான... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க