tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூலை 2–

வெறுப்பு அரசியலை அண்ணாமலை நிறுத்தாவிடில் சிருங்கேரி மடத்தின் ரகசியம் வெ ளியாகும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 ’காங்கிரஸ் திமுகவின் அடிமை' என்றும் எமர்ஜென்சிக்கு பிறகு இந்திரா காந்தி குடும்பத்தினர் வெளிநாடுக்கு தப்பி சென்றதாகவும், காங்கிரசின் வரலாறு 4 கட்சி தாவி வந்த செல்வப்பெருந்தகைக்கு தெரியாது என்றும் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு சென்னையில் நேற்று செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது:  

 தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியலையும், அவதூறுகளையும் பா.ஜ. பரப்பி வருகிறது. தேசம் முழுவதும் அக்கட்சிக்கு மக்கள் மிகப்பெரும் பாடத்தினை கொடுத்துள்ளனர். இதைபுரிந்துகொண்டு அநாகரீக அரசியலை அவர்கள் நிறுத்திக்கொள்ள வே ண்டும். காங்கிரஸ் வரலாறு குறித்து பேச நான் தயாராக இருக்கிறேன். ஆனால் இந்து மகாசபை , ஜனசங்கம் தொடங்கி பா.ஜ. வரை பேச அண்ணாமலை தயாராக இருக்கிறாரா? 

தமிழின விரோதி

 தமிழின விரோத போக்குடன் கன்னடிகா மனநிலையில் தான் அண்ணாமலை தற்போதும்

இருக்கிறார். அவர், “தமிழனா க இருந்தாலும், காவிரி பிரச்சனை யில் கன்னட மக்களுக்கு தா ன்

உதவி செய்வே ன்” என்று கூறியுள்ளார். இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. இதை

வெளியிட்டா ல் அரசியலில் இருந்து அவர் வெளியேறி விடுவாரா?

  பா ஜ எங்களை தொட ஆரம்பித்தால், சிருங்கேரி மட ரகசியம், அங்கு யார் இருந்தார்? யாரால்

அண்ணாமலை உருவாக்கப்பட்டா ர்? என்பது குறித்து பேசுவோம். காங்கிரஸை திமுகவின் அடிம க்கட்சி என்கிறார். இந்த வார்த்தை எஜமானிடமிருந்து மட்டும் தான் வரும். ’நான் யாருக்கும் அடிமையில்லை . யாரும் எனக்கு அடிமையில்லை ; என்று சொன்ன அம்பேத்கரை அவர் படித்துள்ளாரா?

யார் கட்சி மாறி?

தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பா ளர்கள் வெற்றி பெறுவதற்காக நான்

பாடுபடுவேன். ஆனால் தன் கட்சி வேட்பாளர் தோற்க வேண்டும் என்பதற்காகவே பாடுபடுபவர்

அண்ணாமலை என்பது அக்கட்சியினருக்கே தெரியும். என்னை பல கட்சி மாறி வந்ததாக அண்ணாமலை கூறுகிறார். அதை அவரால் நிரூபிக்க முடியுமா ? நான் ஆரம்பத்தில் தலித் இயக்கங்களில் மட்டும் தான் பணியாற்றியுள்ளேன். இந்த

உண்மை கூட அவருக்கு தெரியவில்லை என்றால் அவரை எதன் அடிப்படையில் கட்சி

தலைவராக நியமித்துள்ளனர் என தெரியவில்லை. அவர் வட்ட செயலாளராக கூட நியமிக்க

தகுதியில்லா தவர். இப்படி தொடர்ந்து அருவருப்பான அரசியல், அகங்கார அரசியல் பேசினால்,

அண்ணாமலைக்கு தினமும் நாங்கள் பதிலடி கொடுப்போம்.இது போன்ற வெறுப்பு அரசியலை, அவதூறு பேச்சுக்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சிருங்கேரி மடத்தின் ரகசியத்தை நாங்கள் வெளியிடுவோம்.

பிரதமர் பயணம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் குறித்த மர்மத்தை வெளியிட வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுள்ளார். வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்தும் அதன் பேரில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் ஏற்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்தும் சட்டப்பேரவையில் முதல்வர் தெளிவாக எடுத்துரைத்து விட்டார். இந்நிலையில், அதுகுறித்து பேசுவது ஏற்புடையதல்ல. மேலும், பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்தும் அப்போது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும் வேலை வாய்ப்புகள் குறித்தும் பேச தயாரா?.

இவ்வாறு அவர் கூறினார்.

இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க