tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

நாக்பூர், அக். 14–

 செல்போன் மற்றும் டிவி விளம்பரங்களால் நமது சமுதாயத்திலும், குடும்பங்களிலும் ஏற்படுத்தும் தீமைகளைக் கட்டுப்படுத்த, சட்டம் இயற்ற வேண்டியது அவசியம் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் பகவத் கூறினார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் விஜயதசமி விழா நடந்தது. இதில் அதன் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: 

ஆர்எஸ்எஸ், நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த ஆண்டு முக்கியமானது. மக்களின் குணநலன்களை பொறுத்து, ஒரு நாடு மகத்தானதாக மாறும். கடந்த சில ஆண்டுகளாக, உலக அரங்கில் பாரதம் ஒரு சிறந்த வலிமையான, உறுதியான நாடாக நிலைபெற்றுள்ளது. உலகம், நமது முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது. நமது, ‘உலகமே ஒரு குடும்பம்’ என்ற உணர்வு, சுற்றுசூழல் பற்றிய நமது பார்வை, யோகா போன்றவற்றை உலகம் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டுள்ளது.  

ஆனால், நமது மனோதிடத்தைச் சோதிக்க சில சதிவேலைகளும் நடக்கிறது. நம் முன் உள்ள சதிகளை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். உலக அளவில் பாரதம் முக்கியத்துவம் பெற்றுள்ளதால் சுயநலவாதிகள் பாரதத்தின் வளர்ச்சியை ஒரு வரம்பிற்குள்ளே கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்கள். பொய் அல்லது திரிக்கப்பட்ட செய்தியின் அடிப்படையில் பாரதத்தின் நன்மதிப்பைக் கெடுப்பதற்காக, திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 

சட்டம் அவசியம்  

ஒருகாலத்தில் பெரியவர்கள் கையில் மட்டுமே இருந்த செல்போன், இன்று பல சிறுவர்களின் கைகளை அடைந்துவிட்டது. இன்று செல்போன், கண்ணியமற்ற விஷயங்களுக்கான வடிகாலாகிவிட்டது. டிவி விளம்பரங்களும், அருவருக்கத்தக்க படக்காட்சிகளும், பாடல்களும் நமது சமுதாயத்திலும், குடும்பங்களிலும் ஏற்படுத்தும் தீமைகளைக் கட்டுப்படுத்த, சட்டம் இயற்ற வேண்டியது அவசர தேவையாகிவிட்டது. 

 இளைஞர்கள் மத்தியில் காட்டுத்தீயைப் போல் பரவி வரும் போதை பழக்கம், சமுதாயத்தை படுகுழியில் இறக்கி புதைத்துக் கொண்டிருக்கிறது. சமூகத்தை நன்னெறிப்படுத்தும் பழக்க வழக்கங்களை மீண்டும் உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

 இந்த உலக நன்மைக்கான சாதனையில், சங்கம் ஒரு மவுனமான பூஜாரியாக ஈடுபட்டுள்ளது. இந்தத் தவம்தான், நம் அனைவருக்கும் நமது புனிதமான தாய்நாட்டை மகோன்னதமான நிலைக்குக் கொண்டு செல்லத் தேவையான வலிமையையும் வெற்றியையும் தரும். 

இந்தத் தவத்தின் மூலம், உலகின் அனைத்து நாடுகளும் தங்கள் சொந்த முன்னேற்றத்தை அடைந்து, மகிழ்ச்சி, அமைதி மற்றும் நல்ல உணர்வுகள் நிறைந்த புதிய உலகை உருவாக்குவதில் பங்களிக்கும். இவ்வாறு அவர் பேசினார். 

++++++++++++++++++++

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க