tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, அக். 7– 

'திருச்சிற்றம்பலம்' படத்துக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட சிறந்த நடன இயக்குனருக்கான விருது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

பிரபல நடன இயக்குனர், ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படுகிற ஷேக் ஜானி பாஷா. இவர், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வந்தார். 

ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்', தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்', சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' உள்ளிட்ட படங்களில் இவர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

தனுஷ் நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இவர் "மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே, சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே" பாடலில் சிறந்த நடன காட்சிகளை அமைத்ததற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை சக நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணனுடன் இணைந்து இவர் வாங்கவிருந்தார்.

ஆனால், ஜானி மாஸ்டருடன் இணைந்து பணியாற்றிய பெண் நடன உதவி இயக்குனர், 2020ல் பணியின் நிமித்தம் மும்பை சென்றபோது ஜானி மாஸ்டர் தனக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதைத் தொடர்ந்து பாலியல் தொல்லை தந்து வந்ததாகவும் பரபரப்பு புகார் எழுப்பினார். இதன்மீது வழக்கு பதிவானது. பின்னர் தலைமறைவான ஜானி மாஸ்டர், கோவாவில் சைபராபாத் போலீசாரால் செப். 19ல் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார். 

 இதற்கிடையே டில்லி விஞ்ஞான் பவனில் நாளை (8ம் தேதி) தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடக்க உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொண்டு விருது பெற ஏதுவாக இவருக்கு கோர்ட் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், இவருக்கு தேசிய விருது வழங்குவது குறித்து சமூக வலைத்தளங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. 

இந்த நிலையில், 'திருச்சிற்றம்பலம்' படத்துக்காக சிறந்த நடன இயக்குனராக தேர்வு செய்து ஜானி மாஸ்டருக்கு அறிவித்த விருது நிறுத்தி வைக்கப்படுவதாகவும், அவருக்கு அனுப்பிய அழைப்பு திரும்பப்பெறப்படுவதாகவும் தேசிய திரைப்பட விருதுகள் குழு அறிவித்துள்ளது.

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க