tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, மே.23-

‘தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் 7 ஆயிரத்து 682 புதிய பஸ்களும், 1,500 கூண்டு புதுப்பிக்கப்பட்ட பஸ்களும் இயக்கப்படும்' என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

தி.மு.க அரசு ஆட்சிக்காலங்களில் அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்ணாதி.மு.க. அரசு கடந்த 2011- 2021 வரை ஆண்டுக்கு 1,449 பஸ்கள் வீதம் 10 ஆண்டுகளில் 14 ஆயிரத்து 489 புதிய பஸ்களை அறிமுகப்படுத்தியது. அத்துடன் போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டுக்கு ரூ.2,349.47 கோடி வீதம் ஆண்டுக்கு ரூ.23,494.74 கோடி வழங்கியது. ஆனால் தி.மு.க அரசு 2006- 2011 வரை ஆண்டுக்கு 3001 பஸ்கள் வீதம் 5 ஆண்டுகளில் 15 ஆயிரத்து 5 பஸ்கள் வாங்கியது. அத்துடன் போக்குவரத்து கழகங்களுக்கும் 2021- 2024 ஆண்டுக்கு ரூ.7,375.68 கோடி வீதம், 4 ஆண்டுக்கு ரூ.29,502.70 கோடி வழங்கி உள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் புதிய பஸ்கள் வாங்காததால், தற்போது ஆயுட்காலம் முடிந்த பஸ்களை கழிவு செய்துவிட்டு புதிய பஸ்களை மாற்ற வேண்டி உள்ளது. கோர்ட்டு அறிவுரையை ஏற்று, ஜெர்மன் வளர்ச்சி வங்கி மூலம் 2 ஆயிரத்து 213 டீசல், 500 மின்சார பஸ்கள் கொள்முதல் செய்யவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் தற்போது கூண்டு கட்டுவதிலும், ஒப்பந்த நிலையிலும் உள்ளது.

2024- 2025-ம் ஆண்டு இறுதிக்குள் 7 ஆயிரத்து 682 புதிய பஸ்களும், 1,500 கூண்டு புதுப்பிக்கப்பட்ட பஸ்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 300-க்கும் அதிகமான புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறது.

பெண்களுக்கு கட்டணமில்லா பயணச் சேவை தொடங்கப்பட்டு, இதுவரை பெண்கள் 473.61 கோடி பயண நடைகளும், திருநங்கைகள் 28.62 லட்சம் பயண நடைகளும், மாற்றுத்திறனாளிகள் அவர் உதவியாளர்கள் 3.78 கோடி நடைகளும் பயனடைந்துள்ளனர்.

தற்போது 1.76 கோடி பயணிகள் தினசரி பயணிக்கின்றனர். முந்தைய அரசு காலத்தில் பஸ் விபத்தினால் ஆண்டுக்கு 1,201 உயிரிழப்புகள் ஏற்பட்டது. ஆனால், தற்போது 911 ஆக குறைந்துள்ளது.

இந்த எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கடந்த 1998-ம் ஆண்டு முதல் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு மாத ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு வழங்கிய மாறும் அகவிலைப்படியை மாற்றி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு இணையாக சதவீத அடிப்படையில் அகவிலைப்படி வழங்கப்பட்டது.

போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான பற்றாக்குறை நிதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வரும் நிதி ஆண்டுகளிலும், புதிய பஸ்கள் வாங்கப்பட்டு பழைய பஸ்களை கழிவு செய்ய தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க