tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருச்சி, நவ. 12–
ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து, திமுக ஆட்சியை அகற்றுவோம் என்று பழனிசாமி கூறினார். 
திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி கூறியதாவது:
விருதுநகர் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில், என்னைப் பற்றி சில விமர்சனங்களை முதல்வர் ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்று 42 மாதங்கள் ஆன நிலையில், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்தவர் முதல்வர் ஸ்டாலின். அதை மறந்து அவர்  பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய குடும்பத்தை பற்றி சிந்திக்கவே அவருக்கு நேரம் இருக்கிறது. நாட்டு மக்களை பற்றி அவர் கவலைப்படவில்லை.
 எனக்கு திறமை இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். சாதாரண கிளை செயலாளராக இருந்து, பெரிய இயக்கத்துக்கு பொதுச் செயலாளராகி இருப்பதே என் திறமை. தந்தையின் அடையாளத்தை வைத்து பதவிக்கு வருவது திறமை இல்லை.  
முதல்வராக இருந்த காலத்தில் என்னென்ன சாதனைகள் செய்தேன் என புள்ளிவிபரத்தோடு, துண்டுச்சீட்டு இல்லாமல் நான் கூறுகிறேன். முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தார் என ஸ்டாலின் கூறட்டும். அவர் கூறும் மேடையில், அவரை நேரில் சந்திக்க நான் தயார். மக்கள் கேட்கட்டும்.  வேண்டுமென்றே திட்டமிட்டு அவதுாறு பரப்பினால், அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.
*உங்கள் கூட்டணிக்கு பாஜவையும் பாமகவை வரவேற்க கதவைத் திறந்து வைத்துள்ளீர்களா? 
கதவை திறந்து வைப்பது, மூடி வைப்பது என்பதெல்லாம் அதிமுகவில் கிடையாது. மற்ற கட்சிகளில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். அதிமுகவைப் பொறுத்த வரை ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து லஞ்ச லாவண்யம் நிறைந்த அரசை, ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் எண்ணம்.
    எங்கள் கட்சியின் கொள்கை அடிப்படையில் யார் விருப்பப்பட்டு சேருகிறார்களோ அவர்கள் எல்லாம் ஒத்த கருத்துடைய கட்சிகள்தான். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தேர்தல் வருகிறது. அரசியல் சூழல்களுக்கு தக்கவாறுதான் கூட்டணி வைக்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் யாருடன் கூட்டணி, யார் தலைமையில் கூட்டணி என்பது முடிவாகும். அதற்கு முன்பு எது சொன்னாலும் அவையெல்லாம் தேர்தல் வரை நிற்காது.  ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து, திமுக ஆட்சியை அகற்ற மக்களை சந்திப்போம்.
இவ்வாறு பழனிசாமி தெரிவித்தார்.

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க