tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திற்பரப்பு, ஆக 19-

திற்பரப்பு ஆற்றில் தண்ணீரில் சிக்கிய மூன்று போதை வாலிபர்களை தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேர முயற்சியில் மீட்டனர். மேலும் ஆறு சுற்றுலா பயணிகளையும் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

திற்பரப்பு அருவியின் கீழ் பகுதியில் சுமார் 300 மீட்டர் தொலைவில் பாறைகளுக்கு இடையை தண்ணீர் பாய்ந்து செல்லும். அகலமான ஆற்றில் பாய்ந்து செல்லும் ஆற்றில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் குளிப்பது வழக்கம். மழை காலங்களிலும், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நாடகளிலும் இப்பகுதியில் குளிக்க தடை விதிப்பது வழக்கம். கடந்த சில நாட்களாக தண்ணீர் சற்று குறைவாக உள்ளதால சுற்றுலா பயணிகள் குளித்து வந்தனர்.

நேற்று மதியம் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மாலையில் திற்பரப்பில் தண்ணீர் வரத்து அதிகரிக்க துவங்கியது. மாலை சுமார் ஐந்து மணிக்கு அப்பகுதியில் அழகியபாண்டிபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் அப்பகுதியில் குளித்தனர். 

போதையில்...

 அப்போது ஆற்றின் மறு கரையில் நின்ற வாலிபர், தன்னுடன் வந்த இரண்டு பேர் ஆற்றை கடந்து வர முடியாத சூழலில் உள்ளதாக கூறி உதவி கேட்டார். உடனடியாக வாலிபர்கள் ஆற்றின் மறு கரைக்கு சென்று பார்த்தனர். இருவரும் மது போதையில் தண்ணீர் சூழ்ந்த பாறையில் படுத்து கிடந்தனர். 

மது போதையில் இருந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவர முயற்சித்தும் அவர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதற்கு இடையே தகவல் அறிந்து அருவி பாதுகாப்பு பணியில் இருந்து பெண் போலீசும், அருவி பாதுகாப்பு பணியாளர்களும் அப்பகுதிக்கு சென்றனர். அதற்குள் தண்ணீர் அதிகரித்து வந்தது. ஆபத்தை உணர்ந்த போலீஸ், இது குறித்து குலசேகரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சுமார் ஆறு மணிக்கு நிலைய அலுவலர் செல்வ முருகன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் சம்பவ இடம் வந்தனர்.

கயிறு கட்டி...

ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி மறுகரைக்கு சென்ற வீரர்கள் அப்பகுதியில் நின்ற வேறு ஆறு சுற்றுலா பயணிகளை முதலில் மீட்டனர். பின்னர் மது போதையில் இருந்த இரண்டு வாலிபர்கள் உட்பட மூன்று பேரை சிரமப்பட்டு மீட்டு வந்தனர். அழகியபாண்டியபுரத்தில் இருந்து வந்த வாலிபர்கள், மற்றும் பொதுமக்கள் உதவி செய்தனர். இரவு ஏழு மணியுடன் தண்ணீரில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க