tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

நாடு முழுவதும் பல வருடங்களைக் கடந்த போதிலும் நீட் தற்கொலை மரணங்கள் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்த 18 வயது மாணவி பாகிஷா, நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நேற்று மன அழுத்தத்தில் தான் தங்கியிருந்த வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இளநிலை மருத்துவ கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வைப்பதற்காக, ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் ஏராளமான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோட்டா நகரில் உள்ள பயிற்சி மையங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிக கட்டணங்கள் செலுத்தி பயிற்சி பெற்று வருகின்றனர்.

அதிர்ச்சி... நீட் தேர்வெழுதிய மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

இந்நிலையில், நேற்று மாலை, மத்திய பிரதேச மாநிலம், ரேவா நகரைச் சேர்ந்த பாகிஷா திவாரி (18) என்ற நீட் பயிற்சி மாணவி, நேற்று மாலை கோட்டாவின் ஜவஹர் நகர் பகுதியில் தான் தங்கியிருந்த கட்டிடத்தின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இந்நிலையில் மாணவி பாகிஷா திவாரி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 தனது தாய் மற்றும் சகோதரருடன் மாணவி பாகிஷா வசித்து வந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி மஹராவ் பீம் சிங் (எம்பிஎஸ்) மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தந்தை கோட்டாவுக்கு வந்த பிறகு, பிரேத பரிசோதனை நடத்தப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீட் பயிற்சி பெற்ற வந்த மாணவி பாகிஷா திவாரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பள்ளி மானவி தற்கொலை

இந்த ஆண்டில் கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை தற்போது 11 ஆக உயர்ந்துள்ளது நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் கல்வியாளர்கள், பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

 

 

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க