tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

இம்பால், செப். 1-

நான் என்னதிருடனா.. ஊழல்வாதியா... எந்த குற்றச்சாட்டும் என் மீது கிடையாது. பதவி விலக மாட்டேன் என்று மணிப்பூர் முதல்வர் பைரன்சிங் திட்டவட்டமாக கூறினார். 

மணிப்பூரில் இனகலவரம் வெடித்து ஓராண்டு ஆன நிலையிலும் இன்னமும் அமைதி திரும்பவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நேரில் பார்க்கவில்லை. பலியான, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல், இரங்கல் தெரிவிக்கவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் ஒருமுறை வந்தார். மக்கள் அதிருப்தி காரணமாக அங்கு பார்லி. தேர்தலில் கூட பா. ஜ. நிற்கவில்லை. 

இந்த நிலையில் மணிப்பூர் முதல்வர் பைரன்சிங் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரி வருகின்றன. 

இதற்கு முதல்வர் பைரன்சிங் அளித்த பேட்டி வருமாறு:

முதல்வர் பதவியை விட்டு நான் விலக வேண்டும் என தொடர்ந்து கூறி வருகின்றனர். நான் என்ன திருடனா... ஊழல் செய்தேனா... எந்த குற்றச்சாட்டும் கிடையாது. பிறகு ஏன் நான் பதவி விலக வேண்டும்.. வன்முறை, கலவரம் என்கிறார்கள். அதற்கு நானா காரணம்.? தீவிர வாதிகள் தான் தூண்டி விடுகின்றனர். எதற்கு ம் வன்முறை தீர்வாகாது. பேச்சு வார்த்தை மூலம்தான் தீர்வுகாண முடியும். ஆறு மாதங்களில் தீர்வு காணப்பட்டு அமைதி திரும்பும் என்று நம்புகிறேன். இரு இனத்தவர் இடையே சமரசம் காணும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. 

தேச விரோத, சமூக விரோத செயல்களில் யார் ஈடுபட்டாலும் வேடிக்கை பார்க்க மாட்டோம். மெய்நிகர் ஆதரவு தீவிரவாதிகள் வன்முறை யை கைவிட வேண்டும். குகை இனத்தவர்களுக்குதனி நிர்வாகம் என்ற பேச்சுக்கே இடமில்லை. குகிஸ் இனத்தவருக்கு எதிராக நான் பேசியதாக வெளியான ஆடியோ, ஒரு சதி வேலை. 

மணிப்பூர் விவகாரத்தில் பா ஜ. செல்வாக்கு சரிந்து விட்டதாக கூறுவது தவறு. எனது செல்வாக்கு தான் வீழ்ந்து விட்டது. மணிப்பூருக்கு பிரதமர் வந்திருக்கலாமே என்கிறார்கள். பிரதமர் வருவது அல்லது வராதது ஒரு பிரச்சினை ஆக்கப்பட்டது. பிரதமர் வராவிட்டாலும் உள்துறை அமைச்சரை அனுப்பி வைத்தார்.. எனவே இதில் சர்ச்சை வேண்டாம். 

இவ்வாறு அவர் கூறினார். 

கண்டனம்

முதல்வரின் இந்த பேட்டிக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மக்களை பாதுகாக்க தவறிய மணிப்பூர் முதல்வர் பதவி விலகியே தீர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஆனிராஜா கூறினார். 

மணிப்பூரில் அரசியல் சாசன இயந்திரமே பழுதடைந்து விட்டது என உச்ச நீதிமன்றமே கண்டனம் தெரிவித்தது. எந்த உலகில் முதல்வர் வாழ்கிறார். மணிப்பூரில் அமைதி நீடிப்பதால் எதை வைத்து சொல்கிறார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். ஆ

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க