tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

பரமக்குடி மே9 ராமநாதபுரம் மாவட்டம்

பரமக்குடியில்

பொன்விழா கண்ட இந்தியன் சோலைமலை

வைத்தியசாலை உள்ளது. இந்த வைத்திய சாலையின் கிளைகள் மதுரை கோவை மற்றும்

ராமநாதபுரத்தில் உள்ளது. மருத்துவனை டாக்டர் சோலைமலை செவாலியர் வரதராஜன் பெரும் முயற்சியால்பரமக்குடி அருகில் கச்சாத்தநல்லூரில் சாரதா சங்கர் அடர் மூலிகை வனம் உள்ளது.

இங்கு இலவச சித்த மருத்துவமனையும் செயல்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் பள்ளி

மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் இங்கு உள்ள

ஏராளமான மூலிகைகள்

செடிகள் மற்றும் அதன் மருத்துவ பயன்களையும்

பற்றி தெரிந்து கொண்டு செல்கின்றனர்.

பரமக்குடி யில் உள்ள ஆயிர வைசிய கல்வியியல் கல்லூரி சார்பில் இந்த கல்வியாண்டிற்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் சாரதா சங்கர் அடர் மூலிகைகள்

வனத்தில் அமைந்துள்ள தோட்டத்தில் "மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!! வெப்பச் சலனத்தை

குறைப்போம்!!!" என்ற கருத்தினை வலியுறுத்தி மரங்களை நட்டனர். முகாமில் முதல்வர்(பொ) டி.அல்போன்சா அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரியின் விரிவுரை யாளர்கள் பி.ஜெயபிரியா, டி.கார்த்திகா, டி.மோக ன்தாஸ் டி.விஜயலெட்சுமி மற்றும் ஏ.அமலி ஃப்ளோரா விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டனர். டாக்டர்.எஸ். வரதராஜன் அவர்கள் மூலிகைகளின் பயன்பாடு குறித்தும் இயற்கை முறையில் உடல் ஆரோக்கியத்தை பேணுவது குறித்தும் ஆலோசனைகளை கூறி கல்வி கற்றலுடன் நாம் ஆரோக்கியமாய்

வாழ் வதற்கு சிறுதானியங்களை உணவாக உட்கொள்வோம் என்ற கருத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார். கோடை காலத்தில் வெப்பம் நம்மை தாக்காமல் இருப்பதற்கு ஆரோக்கிய உணவுகளை உட்கொள்வதற்கு விளக்கிச் சொல்லி மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தப் பட்டது. மேலும் மாணவர்களுக்கு காலையில் தர்பூசணி பழமும் மாலையில் பாசிப்பயிறு சுண்டலும் வழங்கப்பட்டது. கல்லூரியின் விரிவுரை யாளர் ஜி.சரத்குமார் அவர்கள் நன்றியுரை கூற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் சிறப்புடன் நிறைவுபெற்றது. கல்லூரி செயலாளர்

டாக்டர் சோலைமலை வரதராஜன் பொதுமக்கள் மூலிகை வனத்தை பார்வையிட்டு

சித்த மருந்துகளின் பயன்பாடுகள் பற்றி தெரிந்து கொண்டு பயனடையலாம் என தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க