tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புவனேஸ்வர், மே 5

பா.ஜனதா சொல்படி தேர்தல்கமிஷன் ஆடுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதை நிரூபிப்பது போலவ ஒடிசாவில் பா.ஜ.,குறை கூறியவுடன் பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரி இடமாற்றம்செய்யப்பட்டார்.

 ஒடிசா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அங்கு ஆளும்கட்சியாக பிஜு ஜனதா தளம் இருந்தாலும், அது பா.ஜ.வின் நட்பு-க்கட்சியாகவே உள்ளது. இருந்தாலும் தேர்தல் களத்தில் இரு கட்சிகளும் எதிர்எதிராக நிற்கின்றன.

ஆளும் பிஜு ஜனதா தளத்தில் முதல்வருக்கு அடுத்தபடியாக முக்கிய தலைவராக இருப்பவர் வி.கே.பாண்டியன். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த இவர் விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு கடந்தாண்டு நவம்பரில் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். அதன் பிறகு தீவிர அரசியலில் இவர் கவனம் செலுத்தி வருகிறார். 

இவரது மனைவி சுஜாதாவும் ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரி. ஒடிசாவின் மிஷன் சக்தி துறையின் செயலாளராக இருக்கிறார். இதற்கிடையே அவரது பதவியை வைத்து சுய உதவிக் குழுக்களில் இருக்கும் பெண்களை அரசியல் ஆதாயங்களுக்காகச் சுஜாதா தவறாக வழிநடத்துவதாக பாஜ புகார் அளித்தது. இதனால் சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் முடியும் வரை சுஜாதாவுக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படக்கூடாது என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.  

இந்த புகாரை அளித்த சில மணி நேரத்தில் சுஜாதா கார்த்திகேயனை மக்களுடன் நேரடித் தொடர்பு இல்லாத வேறு துறைக்கு உடனடியாக இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த இடமாற்ற உத்தரவை ஒடிசா மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். சுஜாதாவின் புதிய நியமனம் குறித்த அறிவிப்பை ஓரிரு நாட்களில் ஒடிசா அரசு வெளியிடும் என்றும் அவர் கூறினார்.

===

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க