tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஆக. 11–

-

பா. ஜ. வுக்கு நன்கொடை தராத தொழில் அதிபர் கள் எல்லாம் பொய் வழக்குகளில் அடைபட்டுக் கிடப்பதை திஹார் சிறையில் கண்டேன் என்று விடுதலையான டெல்லி மாஜி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறினார். 

 

டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறி முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் சிசோடியா உள்பட பலர் மீது அமலாக்கத்துறை, சி பிஐ வழக்கு தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்தது. இதில் கைதான சிசோடியா பதினேழு மாதங்களுக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

 இதன் பின்னர் வெளியே வந்த அவரை, குவிந்திருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் அமைச்சர் அதிஷி,

சஞ்சய் சிங் எம்.பி. உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலமைப்பின் அதிகாரம் மற்றும் ஜனநாயகத்தினால் தான் ஜாமீன் கிடைத்தது. அதற்கு பதினேழு மாதங்கள் ஆகி விட்டது. நேர்மையும், சத்தியமும் தான் ஜெயிக்கும். எனக்கு ஜாமீன் வழங்கிய அதே அதிகாரம் டெல்லி

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலையை உறுதி செய்யும் என்றார்.

 பின்னர் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய சிசோடியா," கெஜ்ரிவால் நேர்மையின் சின்னம். அவர் மீது பழி சுமத்தி சதிகளைச் செய்து உள்ளே தள்ளி உள்ளனர். அவர் மட்டுமல்ல... சிறையில் பல தொழில் அதிபர்கள் வாடிக் கொண்டு இருக்கின்றனர். அதற்கு ஒரே காரணம், பா.ஜ.வுக்கு அவர்கள் நன்கொடை கொடுக்கவில்லை. அதனால் பொய் வழக்குகளில் உள்ளே தள்ளி உள்ளனர். இதற்கெல்லாம் விரைவில் விடிவுகாலம் பிறக்கவேண்டும் என்றும் அவர் கூறினார். ரதத்தின் குதிரைகள் தான் நாங்கள். ஆனால் உண்மையான சாரதி சிறையில் இருக்கிறார். விரைவில் அவர் வெ ளியே வருவார்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

+++

 

BOX

பரமபத விளையாட்டு போல

சிசோடியாவை அலைப்பதா?

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவாய் மற்றும் விசுவநாதன் அளித்த தீர்ப்பு:

  

பரமபத விளையாட்டு போல சிசோடியாவை அலைய விடுகிறீர்கள். மீண்டும் விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என ஜாமீனுக்காக அவரை அலைய விடுவது வெற்று நடைமுறை. வாழ்க்கை மற்றும் சுதந்திரம் தொடர்பாக நமது அரசியல் சட்டம் வழங்கி உள்ள புனிதமான உரிமைகளுக்காக ஒவ்வொரு தூணாக ஒரு குடிமகன் ஓடிக் கொண்டிருக்க முடியாது என நீதிபதிகள் இடித்துரைத்தனர். வழக்கை விரைவாக விசாரித்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் நீண்ட காலத்துக்கு சிசோடியாவை சிறையில் வைத்திருக்க முடியாது. 493 சாட்சிகள், ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், ஒரு லட்சத்து க்கும் மேற்பட்ட பக்கங்களில் டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளன. எனவே மிக விரைவில் இந்த வழக்குகள் முடிக்கப்படாது என்பது தெளிவாகிறது. எனவே காலவரையின்றி ஒருவரை சிறையில் வைப்பது சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல். விரைவான விசாரணைக்கான உரிமை, சுதந்திரத்துக்கான உரிமை எல்லாம் புனிதமான உரிமைகள். எனவே சிசோடியா வுக்கு ஜாமீன் மறுத்து விசாரணை நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ரூ. 10 லட்சம் சொந்த ஜாமீன், அதே தொகைக்கான இருவர் உறுதிமொழி யுடன் ஜாமீனில் செல்லலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

++++

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க