tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, மே.14-

பிளஸ்-2 தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதலிடம் பிடித்த மாணவிக்கு 100 சதவீதம் கல்வி உதவித்தொகையுடன் கூடிய சேர்க்கையை எத்திராஜ் கல்லூரி நிர்வாகம் வழங்கி உள்ளது.

சென்னை கொடுங்கையூர், கவிஞர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பார்த்திபனின் மகள் பூங்கோதை. இவர், பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படித்தார். இவர், பிளஸ்-2 தேர்வில் 578 மதிப்பெண்கள் பெற்று சென்னை மாநகராட்சி பள்ளிகளிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவரது படிப்புக்கு அங்கீகாரம் வழங்கி கவுரவிக்கும் விதமாக சென்னை எத்திராஜ் கல்லூரியில் அவருக்கு முழுமையான கல்வி உதவித் தொகையுடன் அவர் விரும்பிய பாடத்தை தேர்வு செய்து கொள்ள கல்லூரி நிர்வாகம் அனுமதி அளித்தது. அதன்படி, பூங்கோதை தான் விரும்பிய பி.காம். (அக்கவுண்டன்சி & பினான்ஸ்) பாடப் பிரிவை தேர்வு செய்தார்.இந்த நிலையில், எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை நேற்று தொடங்கியது. முதல் மாணவியாக பூங்கோதையை அனுமதித்து அவரது கல்லூரி சேர்க்கைக்கான சான்றிதழை கல்லூரியின் நிர்வாக குழு தலைவர் வி.எம்.முரளிதரன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் உமா கவுரி, துணை முதல்வர் விஜயா மற்றும் பேராசிரியைகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின்போது, வி.எம்.முரளிதரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதல் மாணவியாக பூங்கோதை என்ற மாணவி தேர்ச்சி பெற்றார் என்ற செய்தியை பார்த்த உடன், அவருக்கு எங்கள் கல்லூரியில் 100 சதவீதம் கல்வி உதவித்தொகையுடன் இடம் அளிக்க விரும்பி அவரை அழைத்தோம். அவரும் விருப்பப்பட்டு எங்கள் கல்லூரியில் சேர்ந்து உள்ளார். ஒரு மாணவிக்கு உதவி செய்வது என்பது ஏதோ ஒரு துளி போல் தான் உள்ளது. பெண்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாக இருப்பார்கள் என்று எண்ணி தான் இந்த கல்லூரி 75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.

இப்போது, நாங்கள் ஒரு மாணவிக்கு இடம் வழங்குவது போன்று சென்னையில் சுமார் 100 கல்லூரிகள் இருக்கின்றன. ஒவ்வொரு கல்லூரியும் ஒரு மாணவிக்கு முழு கல்வி உதவித்தொகை அளித்தால் கூட அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பெரும் உந்துதலாக இருக்கும். மாணவி பூங்கோதை மேன்மேலும் நன்கு படித்து இந்த கல்லூரிக்கு மட்டும் அல்ல, நாட்டுக்கே பெருமை சேர்க்க வேண்டும் என்பது என்னோட விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி பூங்கோதை கூறியதாவது:-

பிளஸ்-2 தேர்வில் 578 மதிப்பெண் பெற்றது மிகவும் பெருமையாக இருக்கிறது. அதைவிட சந்தோஷம் சென்னையில் சிறந்த கல்லூரிகளில் ஒன்றான எத்திராஜ் கல்லூரியில் நான் விரும்பிய பாடத்தில் 100 சதவீதம் கல்வி உதவித்தொகையுடன் படிக்க வாய்ப்பு கொடுத்த எத்திராஜ் கல்லூரி நிர்வாகத்திற்கு மிகுந்த நன்றி. எனது தந்தை கல்வி கட்டணம் கட்டுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். அக்காவுக்கும் கல்வி கட்டணம் வழங்க வேண்டி உள்ளது. எனவே, எனக்கு 100 சதவீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

என்னை போன்று அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் சாதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் எதிர்காலத்தில் நன்கு படித்து பொருளாதாரத்தில் மேன்மை நிலை அடைந்து என்னை போன்று கஷ்டப்படும் மாணவ-மாணவிகளுக்கு உதவி செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து... மேலும் படிக்க

இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். பணி நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில்... மேலும் படிக்க

திட்டமிட்ட பணிகள் முடிவு பெறும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பணிபுரியும்... மேலும் படிக்க

எந்த ஒரு செயலிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தாய் வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். சிறு வணிகம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். வியாபாரப் பணிகள் மத்திமமாக நடைபெறும்.... மேலும் படிக்க

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள்... மேலும் படிக்க

சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் காணப்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால்... மேலும் படிக்க

குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். அரசு காரியத்தில் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். சமுகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். வியாபாரத்தில் இலாபம் மேம்படும். வித்தியாசமான மின்னணு... மேலும் படிக்க

பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்களில் வேகம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களைச் சீரமைப்பீர்கள். ஆன்மிகப் பணிகளில்... மேலும் படிக்க

திருப்பணி விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில இடமாற்றம் நேரிடலாம். கணவன்,மனைவிக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். உழைப்பிற்கு உண்டான... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க