tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, அக்.6–

இந்திய பொருளாதாரம்மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. இந்தியா முதலிடத்தை அடைய தயாராகி வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

டெல்லியில் மூன்றாவது கௌடில்யா பொருளாதார மாநாடு இன்று நிறைவடைகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

  இன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது. இன்று உலகளாவிய நிதித் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதிலும், நவீன கைப்பேசி தகவல் பயன்பாட்டிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இணைய பயனர்களைப் பொறுத்தவரை உலகில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம். அதே நேரத்தில் உலகின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் கிட்டத்தட்ட பாதி இந்தியாவில் நடக்கிறது. 

   60 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு அரசை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் வாழ்க்கை நன்றாக மாறும்போது, நாடு சரியான பாதையில் செல்கிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு கிடைக்கிறது. இந்த உணர்வு இந்திய மக்களின் தீர்ப்பில் தெரிகிறது. ௧40 கோடி நாட்டு மக்களின் நம்பிக்கை இந்த அரசின் மிகப்பெரிய சொத்து. மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் மூன்று மாதங்களில் துணிச்சலான கொள்கை மாற்றங்கள், பணிகள், திறன்களில் வலுவான உறுதிப்பாடு, நீடித்த வளர்ச்சி, புதுமைகளில் கவனம், நவீன உள்கட்டமைப்பு, வாழ்க்கைத் தரம், விரைவான வளர்ச்சியின் தொடர்ச்சியை காணலாம். இது முதல் மூன்று மாதங்களில் எங்கள் கொள்கைகளின் பிரதிபலிப்பாகும். இந்த காலகட்டத்தில் 15 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள திட்டங்களுக்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

 இன்று நாட்டில் 33 கோடிக்கும் அதிகமான கைப்பேசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு அதிக லாபம் ஈட்ட சிறந்த வாய்ப்புகள் உள்ளன. தற்போது செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள் போன்ற முக்கியமான தொழில்நுட்பங்களில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. இந்த இரண்டு துறைகளிலும் அரசு பெரும் அளவில் முதலீடு செய்துள்ளது.

முதலிடத்தில் இந்தியா

மலிவான அறிவுசார் சக்தியின் உலகின் மிகப்பெரிய ஆதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவில் தற்போது 1,700-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட உயர் திறன் வாய்ந்த இந்திய நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர். புதிய தேசியக் கல்விக் கொள்கையால் முக்கிய சீர்திருத்தங்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு நாளும் இரண்டு புதிய கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. பிரதமரின் உள்ளிருப்புப் பயிற்சித் திட்டத்தில் ஒரு கோடி இளம் இந்தியர்களுக்கு பெரிய நிறுவனங்களில் உலக அனுபவத்தைப் பெறும் வாய்ப்பு வழங்கப்படும்.  

இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. இன்று, இந்தியா முதலிடத்தை அடையத் தயாராகி வருவது மட்டுமல்லாமல், அதில் நிலைத்து இருக்க கடுமையாக உழைத்து வருகிறது. இவ்வாறுஅவர் பேசினார்.

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க