tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, அக். 15-–

 

‘‘வடகிழக்கு பருவமழையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்,’’ என, துணை முதல்வர் உதயநிதி கூறினார்.

 

சென்னை நேரு விளையாட்டரங்கில் நடக்கும் முதல்வர் கோப்பை மாநில போட்டிகளை, துணை முதல்வர் உதயநிதி நேற்று பார்வையிட்டார். அப்போது, 52 கிலோ எடைப் பிரிவுக்கான கல்லுாரி மாணவியரின் ஜூடோ போட்டிகளை பார்வையிட்டு, வெற்றியாளர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அங்குள்ள உணவு கூடத்தை ஆய்வு செய்த பின், வீராங்கனையருடன் உரையாடியபடி, மதிய உணவு சாப்பிட்டார்.

 

பின், அவர் அளித்த பேட்டி:

 

இந்தாண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்காக, முதல்வர், 83.37 கோடி ரூபாய் ஒதுக்கியதில், 37 கோடி ரூபாயை பரிசுத் தொகைக்காக மட்டுமே அறிவித்துள்ளார். கடந்தாண்டு ஐந்து லட்சம் பேர் பங்கேற்ற நிலையில், இந்தாண்டு 12 லட்சம் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஐந்து பிரிவுகளில், 36 வகையான விளையாட்டுகளில் நடக்கும் இந்த போட்டிகளை, 10,000க்கும் மேற்பட்ட நடுவர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் நெறிப்படுத்துகின்றனர். 

 

இதில் வெற்றி பெறும் இளம் வீரர், வீராங்கனையரை தேர்வு செய்து பயிற்சி அளித்து, சர்வதேச போட்டியாளர்களாக்கி, தமிழகத்தை நாட்டின் விளையாட்டு தலைநகராக்க வேண்டும் என்பதே குறிக்கோள். இறுதி போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனையருக்கு, வரும் 24ம் தேதி, முதல்வர் ஸ்டாலின், சான்றிதழ், பரிசு மற்றும் கேடயங்களை வழங்க உள்ளார்.

 

போட்டிகளுக்கு தடையாக மழை இருந்தால், வீரர், வீராங்கனையரை பத்திரமாக தங்க வைத்து, ஏற்கனவே அறிவித்துள்ள நாட்களுக்கு பின் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

 

தமிழகத்தில் மழை பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், முதல்வர் ஸ்டாலின், கடந்த மூன்று மாதங்களாக ஐந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி உள்ளார். இதில், நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை அமைச்சர்கள், சென்னையில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். அவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.  

மழையை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்து ஆலோசித்து, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

இவ்வாறு அவர் கூறினார்.

ராசி பலன்

திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து... மேலும் படிக்க

இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். பணி நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில்... மேலும் படிக்க

திட்டமிட்ட பணிகள் முடிவு பெறும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பணிபுரியும்... மேலும் படிக்க

எந்த ஒரு செயலிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தாய் வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். சிறு வணிகம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். வியாபாரப் பணிகள் மத்திமமாக நடைபெறும்.... மேலும் படிக்க

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள்... மேலும் படிக்க

சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் காணப்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால்... மேலும் படிக்க

குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். அரசு காரியத்தில் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். சமுகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். வியாபாரத்தில் இலாபம் மேம்படும். வித்தியாசமான மின்னணு... மேலும் படிக்க

பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்களில் வேகம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களைச் சீரமைப்பீர்கள். ஆன்மிகப் பணிகளில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க