tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள மவுண்ட் செயிண்ட் ஜோசப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் தொண்டு நாள் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் பள்ளி மைதானத்தில் துவங்கி மதியம் வரை நடைபெற்றது. 

இருபால் ஆசிரியர்கள் தயாரித்த தின்பண்டங்கள், சிற்றுண்டி, சிறு தானியங்களால் செய்யப்பட்ட உணவு வகைகள் மற்றும் சைவ, அசைவ வெரைட்டி ரைஸ்கள் விற்பனை செய்யப்பட்டது. குதிரை சவாரி, ராட்டினம் சுற்றுதல், சிறு சிறு கட்டண விளையாட்டுகள் போன்றவைகளும் இடம் பெற்றிருந்தன.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. மாணவ, மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்த தின்பன்டங்கள், உணவுகள் ஆகியவற்றை மகிழ்ச்சியாக வாங்கி சாப்பிட்டனர், குதிரை சவாரி செய்தனர் 

நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு அழைப்பாளர் பிரபாகரன் கூறும்போது, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி செய்யும் பண்பை இப்பள்ளி ஒவ்வொரு ஆண்டும் கடைபிடித்து வருகிறது எனவும், மாணவர்கள் கொடுத்து உதவும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் மேற்கோள் காட்டினார். 

நன்கொடை வழங்கியவர்களில் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த திருவிழாவில் கிடைக்கும் தொகையை ஏழை எளிய மக்களுக்கும், பசியால் வாடும் மக்களுக்கும் பிணியால் அவதியுரும் மக்களுக்கும் உதவிடுவதாக பள்ளி முதல்வர் அருட்சகோதரி ஜோதி அவர்கள் தெரிவித்தார்.

முதல்வர் அருட்சகோதரி ஜோதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஏழை மக்களுக்கு உதவிடும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக பிரபாகரன் பங்கேற்று  தமிழாசிரியர் கு. சபரி வரவேற்புரை நல்கினார். பள்ளியின் செயலர் திருமதி. ஷக்கிலா நன்றி கூறி நிகழ்வு இனிதாக நடைப்பெற்றது.

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க