tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, மே 17–

-

தேர்தல் பிரசார கூட்டங்களில் முஸ்லிம் வெறுப்பு பேச்சுகளை பேசிவிட்டு இப்போது பேட்டியில் மூடி மறைப்பதா என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். 

 

இதுகுறித்து வைகோ அறிக்கை:

 

 

தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் அளித்த நேர்காணலில் தாம் முஸ்லிம்கள் குறித்து எதுவும் பேசவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில் கூறி இருக்கிறார்.

 

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ம் தேதி நடந்து முடிந்தவுடன், ஏப்ரல் 21ம் நாள் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி முஸ்லிம்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அவரது ரத்த அணுக்களில் ஊடுருவி இருக்கின்ற இஸ்லாமிய வெறுப்பை காட்டுகின்றன என்று நான் அறிக்கை தந்தேன். 

 

 

காங்கிரசின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை போன்றிருக்கிறது;

 

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பிரதமர் மன்மோகன் சிங் தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்;

 

அதன் பொருள் அவர்கள் இந்த செல்வத்தை அதிக குழந்தையைப் பெற்றவர்களுக்கும் ஊடுருவல் காரர்களுக்கும் பகிர்ந்து அளிப்பார்கள்;

 

பெண்களின் தாலியை கூட விட்டு வைக்க மாட்டார்கள் என்று மோடி பேசியது உண்மையா? இல்லையா?

 

 

ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை பறித்து, மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது என்று குற்றம் சாட்டினாரே? மக்கள் மறந்து விடுவார்களா?

 

மேற்குவங்கத்தில் நடந்த தேர்தலில் பிரச்சார கூட்டத்தில், மதத்தின் அடிப்படையில் யாரும் இட ஒதுக்கீடு பெற முடியாது; சி ஏ ஏ சட்டத்தை யாராலும் திரும்ப பெற முடியாது; என்று குறிப்பிட்டாரே நரேந்திர மோடி, அது இஸ்லாமியர்களை குறி வைத்து தான் என்பதை மறுக்க முடியுமா? 

 

மூடி மறைப்­பதா?

 

 

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மிகக் கடுமையாக இஸ்லாமிய வெறுப்பை கக்கிவிட்டு, நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அலை பெருகி கொண்டிருப்பதனால், தொலைக்காட்சி நேர்காணலில் பிரதமர் மோடி தான் பேசியவற்றை மூடி மறைக்கப் பார்க்கிறார்.

 

“இந்து - முஸ்லிம் அரசியல் பேசத் தொடங்கினால் அந்த நாள் முதல், நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாகி விடுவேன்” என்று பிரதமர் மோடி கூறி இருப்பதன் நோக்கத்தை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.

 

பிரதமர் அள்ளி வீசி வரும் அவதூறுகளையும் பொய் உரைகளையும் புறக்கணித்து இந்திய நாட்டு மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பதிலடியை கொடுப்பார்கள்.

 

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க