tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஜூன் 10

பிரதமரின் விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் 17வது தவணையை விடுவிப்பதற்கான ஆவணத்தில் மோடி முதல் கையெழுத்திட்டிருக்கிறார்.

நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவசாயிகள் பலன் பெறும் திட்டங்களுக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதியை விடுவிப்பதற்கான கோப்பு இது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்திருக்கும் நிலையில், 3வது முறையாக பிரதமராக தேர்வாகியிருக்கும் மோடி இன்று முதல் கையெழுத்திட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார் பிரதமர் மோடி. முன்னதாக அலுவலகம் வந்த மோடியை கைத்தட்டி உற்சாகத்துடன் அதிகாரிகள் வரவேற்றனர். இது பற்றி பேசிய மோடி, முதல் நடவடிக்கை விவசாயிகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டிருப்பதன் மூலம், விவசாயிகளின் வாழ்வுக்காக எங்கள் அரசு முழு அர்ப்பணிப்புடன் இருப்பதை காட்டுகிறது. வருங்காலங்களில் விவசாயிகள், விவசாயத் துறைக்காக அதிகம் உழைக்கவிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இன்று மாலை

அமைச்சரவை கூட்டம்

நேற்று பிரதமராக மோடி பதவியேற்றார். அவருடன் 3.0 கேபினட் அமைச்சர்கள், 5 தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் மற்றும் 36 இணை அமைச்சர்கள் என 71 பேர் பதவி ஏற்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர், மக்களின் முன்னேற்றத்துக்கு அயராது உழைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் இல்லத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் திட்டத்தின் கீழ் 2 கோடி கூடுதல் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இடைக்கால பட்ஜெட்டில் அனைத்து குடிமக்களுக்கும் மலிவு விலையில் வீடுகள் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் திட்டத்தின் கீழ் இரண்டு கோடி கூடுதல் வீடுகள் கட்டப்படும் என்றும் அறிவித்தார். இதனை முதல் திட்டமாக செயல்படுத்தும் பொருட்டு முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே அதற்கு ஒப்புதல் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதே கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு எந்த இலாகா ஒதுக்குவது, எந்த பணிகளை கொடுப்பது என்பது குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

ஜூன் 18ந் தேதி

பார்லிமெண்ட் கூட்டம் வரும் 18ந் தேதியன்று பார்லிமெண்ட் முதல் கூட்டம் கூட வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது.

இம்மாதம் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனர். 20ந் தேதி சபாநாயகர் தேர்வு செய்யப்படுவர். 21ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுவார்.

இந்நிலையில், முதல் பார்லிமெண்ட் கூட்டம் எப்போது கூடுகிறது என்பது குறித்து, இன்று மாலையில் நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும். எனக் கூறப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க