tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, நவ. 24–
'வாட்ஸ் அப் யுகத்தில்'கேப்சூல்" மாதிரி வரலாற்றை திரட்டி மக்களுக்கு  புதிய கோணத்தில் கொடுங்கள்' என்று இளம் பேச்சாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி சார்பில்  ‘கலைஞர் 100 – வினாடி-வினா’ போட்டி  பரிசளிப்பு  விழா நடந்தது. இதில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பரிசுகளை வழங்கி பேசியதாவது: 
    இவ்வளவு பெரிய போட்டியைத் தமிழ்நாடு முழுவதும் நடத்துவது சாதாரண செயல் அல்ல... எப்படி இந்தப் போட்டியை இவ்வளவு சிறப்பாக நடத்தினீர்கள் என்று தங்கை கனிமொழியிடம் நேற்று முன்தினம் கேட்டேன்... அவருடைய பதில் என்னை மலைக்க வைத்தது... உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளை உருவாக்க 15 பேர் கொண்ட குழுவை அமைத்து, அந்தக் குழு 250 புத்தகங்களை ஆய்வு செய்து, திராவிட இயக்கத்தின் வரலாறு – தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – ஆகியோரின் வாழ்வு – தொண்டு – நம்முடைய திராவிட மாடல் அரசின் சாதனைகள் – மக்கள்நலத் திட்டங்கள் என்று 40 ஆயிரம் கேள்விகளை உருவாக்கியிருக்கிறார்கள்... உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அவர்கள் கேள்விகளைக் கேட்டதைவிட, உங்களைப் படிக்க வைத்ததுதான் உள்ளபடியே பாராட்டுக்குரியது! இதுதான் இந்தக் ‘கலைஞர் 100 – வினாடி-வினா’ போட்டியின் மிகப்பெரிய வெற்றி! மிகப்பெரிய சிறப்பு என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.
 ௨லட்சம் பேர்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேயில் இருந்து, இரண்டு லட்சத்துக்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கெடுத்த இந்தப் போட்டியின் வெற்றி என்பது, புது சிந்தனையாளர்களை உருவாக்குவதுதான்! இரண்டு லட்சம் பேரைத் திராவிட இயக்கத்தைப் பற்றிப் படிக்க வைத்ததன் மூலமாக, இந்தப் போட்டியின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது!

    உங்களுடைய வெற்றி சாதாரண வெற்றி அல்ல. 2 லட்சம் பேரில் இருந்து நீங்கள் வென்றிருக்கிறீர்கள். திராவிட இயக்கம் 100 ஆண்டுகளைக் கடந்த இயக்கம். இதன் வரலாற்றை முழுமையாக அறிந்து - தெளிந்து – புரிந்து, அதை மனதில் பதிய வைத்திருப்பவர்களில் ஒருவராக உங்களை நீங்களும் தகுதிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இப்போது நீங்கள் அனைவருமே ‘Dravidian Encyclopedia’!
வாட்ஸ் அப் யுகம்
இது வாட்ஸ்அப் யுகம்! வாட்ஸ் அப்-இல், யாரோ பார்வேர்டு செய்யும் செய்திகளை ஆராய்ந்து பார்க்காமல் உண்மை என்று நம்பும் ஒரு கூட்டம் இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், உண்மை வரலாறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அனைவரும் அனைத்துப் புத்தகங்களையும் படித்துவிட முடியாது. அவர்களுக்கு கேப்சூல் மாதிரி வரலாற்றை திரட்டி நாம் புகட்ட வேண்டும். அதற்கு, இதுபோன்ற போட்டிகள் மிகச் சிறந்த வழிமுறையாக இருக்கும்.
    கனிமொழிக்கு நான் வைக்கும் வேண்டுகோள்... வேண்டுகோள் அல்ல, உரிமையோடு சொல்கிறேன்... இதுபோன்ற கருத்துகளை விதைக்கும் களப்பணியைத் நீங்கள் தொடர வேண்டும்.
பேசியே வளர்ந்தோம்
பேசிப் பேசி வளர்ந்த இயக்கம், இந்த இயக்கம். எழுதி எழுதி வளர்ந்த இயக்கம், இந்த இயக்கம். அப்படிப் பேச்சாளர்களை – எழுத்தாளர்களை இளந்தலைமுறையில் இருந்து உருவாக்க வேண்டும். புதிய புதிய செய்திகளை – புதிய புதிய கோணத்தில் சொல்ல வேண்டும். சொல் புதிது – சுவை புதிது – பொருள் புதிது – என்ற வகையில சொல்ல வேண்டும். மிக நீண்ட வரலாற்றுத் தகவல்களைக்கூட மிகச் சுவையாக - மக்கள் மனதில் பதியும் வகையில் சொல்ல வேண்டும்.  நம்முடைய கொள்கை வீரர்களின் பேச்சு நறுக்கென்று இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும். ஒருவரின் பேச்சு, மூளையை தொட வேண்டும்! அதன் மூலமாக, அவர்கள் மனதை ரீச் செய்ய வேண்டும்! அப்படி நீங்கள் அனைவரும் கருத்து சொல்லும் ஸ்டைலை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க