tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

ஐதராபாத்,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட்- அபிஷேக் சர்மா களமிறங்கினர். இவர்களில் அபிஷேக் சர்மா இந்த முறை ஏமாற்றம் அளித்தார். அவர் 12 ரன்களில் ஆவேஷ் கான் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் கை கோர்த்த நிதிஷ் ரெட்டி - டிராவிஸ் ஹெட் இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில், டிராவிஸ் ஹெட் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த பிறகும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் குவித்தார். கடைசி கட்டத்தில் கிளாசென் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 42 ரன்களை குவித்தார்.

இதன் மூலம் ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரை அபாரமாக வீசிய புவனேஸ்வர் குமார், அதிரடி ஆட்டாக்காரர்களான ஜாஸ் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சனை அவுட்டாக்கினார்.

இதையடுத்து ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் பணியின் ஈடுபட்டனர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி ரன்ரேட் உயராமல் பார்த்துக்கொண்டனர். அத்துடன், இருவரும் அரைசதம் அடித்து அடித்தனர். இந்த ஜோடி 135 ரன்கள் திரட்டிய நிலையில் பிரிந்தது.

ஜெய்ஸ்வால் 67 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து சிறிது நேரத்தில் ரியான் பராக் 77 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து ஹெட்மயர் 13 ரன்னிலும், துருவ் ஜுரேல் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆட்டம் பரபரப்பானது.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றில் 13 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் அணியால் 11 ரன்களே எடுக்க முடிந்தது. இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஐதராபாத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க