tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

ராய்ப்பூர், ஆக. 26–

‘‘ தீவிரவாதத்தை ஒழித்து 2026 மார்ச்க்குள் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’’ என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

 

  சட்டீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில், நக்சலைட்டுகள் பாதிப்புள்ள மாநிலங்களின் நிலைமையை ஆய்வு செய்வதற்காக மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்தது. இதில், சட்டீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், துணை முதல்வர் விஜய் சர்மா, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிர மாநில தலைமை செயலர்கள், டிஜிபிக்கள், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் நக்சலைட் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி, தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.

இதன் பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: 

  நக்சல் தீவிரவாதம், பெரும் சவாலாக உள்ளது. 50 ஆண்டுகளுக்கு மேலாக, இந்த பிரச்னை நாட்டில் நீடித்து வருகிறது. கடந்த 40 ஆண்டுகளில் மட்டும், நக்சல் தீவிரவாதத்துக்கு நாம், 17 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பலி கொடுத்துவிட்டோம். 

2014-ம் ஆண்டுக்கு முந்தைய பத்து ஆண்டுகளை ஒப்பிடுகையில், கடந்த பத்தாண்டுகளில் நக்சல் தீவிரவாதம் தொடர்பான வன்முறைகள் 52 சதவீதமும், இறப்பு எண்ணிக்கை 69 சதவீதமும் குறைந்துள்ளது. நக்சல் தீவிரவாத சம்பவங்கள், 2004- – 2014-ம் ஆண்டு காலகட்டத்தில் 14 ஆயிரத்து862 ஆக இருந்தது. 2014-ம் ஆண்டுக்கு பிந்தைய 10 ஆண்டுகளில் அது 7 ஆயிரத்து 128 ஆக குறைந்துள்ளது. நக்சல் தீவிரவாதத்தால் பாதுகாப்புப் படையினரின் இறப்பு எண்ணிக்கை 2004 – -14 ம் ஆண்டு காலகட்டத்தில் ஆயிரத்து750 ஆக இருந்தது. 2014 – -2024-ம் ஆண்டு காலகட்டத்தில் 485 ஆக குறைந்துள்ளது.

 இதேபோல், நக்சல்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 2010-ல் 96 ஆக இருந்தது. இப்போது, 35 குறைந்துள்ளது.தீவிரவாதத்தை கைவிட்டு, தேசிய நீரோட்டத்துக்கு திரும்பும் நக்சலைட்களின் மறுவாழ்வுக்கு, உதவிகள் செய்யப்பட்டன.

 நக்சல்இல்லா இந்தியா

சட்டீஸ்கரில் பாஜ ஆட்சி அமைந்தபின் கடந்த 8 மாதங்களில், 142 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நக்சல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நக்சல் தீவிரவாததத்துக்கு எதிராக, கடும் நடவடிக்கைள் தொடரும். 2026 மார்ச் மாதத்துக்குள், நாட்டில் நக்சல்கள் முற்றிலும் ஓழிக்கப்பட்டு, நக்சல் இல்லாத இந்தியா உருவாக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இதில் அரசியலுக்கு சிறிதும் இடமில்லை. தீவிரவாதத்திலிருந்து மக்கள் காப்பாற்றுவது மட்டுமே ஒரே நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார். 

++

ராசி பலன்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல மாற்றத்தைத் தரும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நீண்ட... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகள் முடியும்.  எதிர்பாராத சில உதவிகள் மூலம் நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த எண்ணம் கைகூடும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சில பயணம் மூலம் அனுபவம் மேம்படும். கல்வியில் ஆர்வமின்மை... மேலும் படிக்க


நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாறுபட்ட... மேலும் படிக்க

ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்துச் செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க