tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஆக.14–

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது. விசாரணையின்போது, அவரது செல்வாக்கு பற்றிய கேள்வியால் சிறிய வாதம் நடந்தது.

 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பணியாளர்கள் நியமனத்தில் லஞ்சம் வாங்கியதாக திமுக ஆட்சி காலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு அடிப்படையில், லஞ்ச வசூலில் சம்பந்தப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் குறித்து அமலாக்கத்துறை (இ.டி.) வழக்கு பதிவு செய்தது. பல காரணங்களால் இரு வழக்குகளும் தேங்கியிருந்தன. பின்னர் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்பேரில் விசாரணை சூடு பிடித்து செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். 2023 ஜூன் 14ம் தேதி கைதான அவர் இன்னமும் சிறையில் இருக்கிறார். அவரது ஜாமீன் அப்பீல் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளன. இந்த அப்பீல் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

செந்தில் பாலாஜி தரப்பில் சீனியர் வக்கீல்கள் முகுல் ரோஹத்கி, சித்தார்த் லுத்ரா, இ.டி. தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வக்கீல் ஜோஹேப் ஹுசேன், லஞ்ச வசூலால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வக்கீல்கள் கிருஷ்ண குமார், கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் ஆகியோர் வாதிட்டனர்.

  நீதிபதி ஓகா, ‘‘லஞ்ச வசூல் வழக்கு அடிப்படையில்தான் இ.டி. வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாவிட்டால், இ.டி. வழக்கு விசாரணை எப்படி நடக்கும்? லஞ்ச வசூல் வழக்கு விசாரணை தொடங்காத நிலையில், இ.டி. வழக்கு விசாரணையை எப்படி தொடங்க முடியும்? நாங்கள் லஞ்ச வசூல் வழக்கை நம்பி இருக்கவில்லை, நாங்கள் தனியாக விசாரணை நடத்தி கொள்வோம் என்று நீங்கள் அறிவிப்பீர்களா?. லஞ்ச வசூல் வழக்கின் 3 எப்ஐஆர்களில் 500க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த விசாரணை எப்போது தொடங்கும்? 500க்கு மேற்பட்டோரிடம் விசாரணை நடத்த எவ்வளவு காலம் தேவைப்படும்? அதுவரை இ.டி. வழக்கை நிறுத்தி வைக்க முடியுமா?’’ என்று கேள்வி எழுப்பினார். 

இ.டி. தரப்பில், ‘லஞ்ச வசூல் வழக்கையும், இ.டி. வழக்கையும் ஒரே வேளையில் நடத்துவதில் நடைமுறை சிக்கல் எதுவும் இல்லை’ என்று பதிலளிக்கப்பட்டது.

வாதங்கள்

செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல்கள், ‘செந்தில் பாலாஜி 300 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். அவருக்கு பல மருத்துவப் பிரச்னைகள் உள்ளன. விசாரணையை இ.டி. இழுத்தடிக்கிறது. எனவே, ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று வாதிட்டனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இ.டி. தரப்பு வக்கீல்கள், ‘செந்தில் பாலாஜிக்கு, தமிழக அரசில் அதிக செல்வாக்கு உள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது சகோதரர் இன்னும் தலைமறைவாக இருக்கிறார். ஜாமீன் வழங்கினால், செல்வாக்கால் சாட்சிகளைக் கலைப்பார்’ என்று வாதிட்டனர்.

லஞ்ச வசூலால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், ‘செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், அவர் நிச்சயமாக சாட்சிகளைக் கலைப்பார். அவருக்கு தமிழக அரசு முழு ஆதரவாக இருப்பதை கோர்ட் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். விசாரணை தாமதத்துக்கு காரணம் செந்தில் பாலாஜியும் தமிழக அரசும்தான். எனவே, விசாரணை தாமதம் என்ற அடிப்படையில் ஜாமீன் வழங்கக் கூடாது’ என்று வாதிடப்பட்டது.

பதவி விலகியும் செல்வாக்கா...

இ.டி. தரப்பிடம் நீதிபதி ஓகா, ‘‘டில்லி மது கொள்கை முறைகேடு வழக்கில், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் 17 மாதங்களுக்கு மேலாக சிறைவாசத்தில் இருக்கிறார் என்ற அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவரும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர்தான். அமைச்சர் பதவி ராஜினாமாவுக்கு பிறகும் செல்வாக்கு தொடரும் என்கிறீர்களா? நான் சீரியஸாகக் கேட்கவில்லை. சாதாரணமாகத்தான் கேட்கிறேன்’’ என்றார். 

அதற்கு, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘ஜாமீன் பெற்றவர் (சிசோடியா). இவரை (செந்தில் பாலாஜி) விட சிறந்தவர்’’ என்று பதிலளித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வக்கீல் சித்தார்த் லுத்ரா, ‘‘இப்படியெல்லாம் எதிர் தரப்பு (இ.டி) வாதிட அனுமதிக்கக் கூடாது. இந்த வழக்கின் வாதங்கள், இந்த வழக்கு சூழல் அடிப்படையில் மட்டுமே நடக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்,

இதையடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

++++++++++++

ராசி பலன்

திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து... மேலும் படிக்க

இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். பணி நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில்... மேலும் படிக்க

திட்டமிட்ட பணிகள் முடிவு பெறும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பணிபுரியும்... மேலும் படிக்க

எந்த ஒரு செயலிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தாய் வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். சிறு வணிகம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். வியாபாரப் பணிகள் மத்திமமாக நடைபெறும்.... மேலும் படிக்க

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள்... மேலும் படிக்க

சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் காணப்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால்... மேலும் படிக்க

குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். அரசு காரியத்தில் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். சமுகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். வியாபாரத்தில் இலாபம் மேம்படும். வித்தியாசமான மின்னணு... மேலும் படிக்க

பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்களில் வேகம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களைச் சீரமைப்பீர்கள். ஆன்மிகப் பணிகளில்... மேலும் படிக்க

திருப்பணி விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில இடமாற்றம் நேரிடலாம். கணவன்,மனைவிக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். உழைப்பிற்கு உண்டான... மேலும் படிக்க

நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடி ஏற்படும்.  வெளிப்படையான பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. பணியில் மறைமுகமான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். ஆவணம்... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க