tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருச்சூர், அக்.25
திருச்சூரில் சுமார் 700 ஜி.எஸ்.டி அதிகாரிகள் ஒரே நேரத்தில் நடத்திய 'ஆபரேஷன் தங்க கோபுரம்' என்ற ரெய்டில் 140 கிலோ கணக்கில் வராத தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் தங்க நகைகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது திருச்சூர் ஆகும். கடந்த ஆறு மாதமாக திருச்சூரில் நகை விற்பனை குறைந்ததாக வியாபாரிகள் கூறி ஜி.எஸ்.டி செலுத்தாமல் இருந்துவந்துள்ளனர்.
ரகசிய விசாரணை
 திடீரென நகைகள் விற்பனை ஆகாமல் இருப்பதன் காரணம் என்னவென்று ஜி.எஸ்.டி உயர் அதிகாரிகள் இருவர் திருச்சூரில் கடந்த சில மாதங்களாக ரகசியமாக விசாரணை நடத்தினர். அப்போதுதான் நகை தொழில் ஈடுபடுவோர் தங்கத்துக்கு ஜி.எஸ்.டி செலுத்தாமல் இருக்க பில் இல்லாமல் நகைகள் விற்பனை செய்தது தெரியவந்தது. எனவே திருச்சூரில் அதிரடி ரெய்டு நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக மாநிலம் முழுவதும் உள்ள ஊழியர்களை அழைக்கும் நிலை ஏற்பட்டது. ரெய்டு என அழைத்தால் நகை தயாரிப்பாளர்களுக்கு தகவல் கசிந்துவிடும் என்பதால் திருச்சூரில் பயிற்சி முகாம் நடக்க உள்ளதாக அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். 
இதையடுத்து சுமார் 700 அதிகாரிகள் திருச்சூருக்கு பிரைவேட் டூரிஸ்ட் பஸ்களில்  சென்றனர். அங்கு சென்றபிறகுதான் தங்க கோபுரம் என்ற அதிரடி ரெய்டு குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  சுமார் 74 நகை தயாரிக்கும் நிறுவனங்களில் அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அதில் கணக்கில் வராத 104 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகளும் நகை தயாரிப்பு நிறுவனங்களுக்கு சாதாரண உடையில் நகை வாங்குவதுபோன்று சென்றுள்ளனர். அங்கு பில் இல்லாமல், ஜி.எஸ்.டி கணக்கு காட்டாமல் நகைகள் விற்பனை செய்யபட்டதை கையும் களவுமாக கண்டுபிடித்தார். 104 கிலோ தங்க நகைகளுக்கும் 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி செலுத்தினால்தான் அவை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராசி பலன்

திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து... மேலும் படிக்க

இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். பணி நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில்... மேலும் படிக்க

திட்டமிட்ட பணிகள் முடிவு பெறும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பணிபுரியும்... மேலும் படிக்க

எந்த ஒரு செயலிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தாய் வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். சிறு வணிகம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். வியாபாரப் பணிகள் மத்திமமாக நடைபெறும்.... மேலும் படிக்க

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள்... மேலும் படிக்க

சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் காணப்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால்... மேலும் படிக்க

குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். அரசு காரியத்தில் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். சமுகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். வியாபாரத்தில் இலாபம் மேம்படும். வித்தியாசமான மின்னணு... மேலும் படிக்க

பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்களில் வேகம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களைச் சீரமைப்பீர்கள். ஆன்மிகப் பணிகளில்... மேலும் படிக்க

திருப்பணி விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில இடமாற்றம் நேரிடலாம். கணவன்,மனைவிக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். உழைப்பிற்கு உண்டான... மேலும் படிக்க

நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடி ஏற்படும்.  வெளிப்படையான பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. பணியில் மறைமுகமான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். ஆவணம்... மேலும் படிக்க

துணைவர் வழியில் மதிப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சமூகப்... மேலும் படிக்க