tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மும்பை, நவ. 15-
ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அரியானா  சட்டசபை தேர்தல் முடிவு போல், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவு  இருக்காது. இங்கு மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் காங்கிரஸ் 80 முதல் 85  சீட்களை பிடிக்கும். இதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன். 
விதர்பா,  மேற்கு மகாராஷ்டிரா, மராத்வாடா பகுதிகளில் காங்கிரசுக்கு நல்ல வெற்றி  கிடைக்கும். கடந்த லோக்சபா தேர்தலைப்போல் சட்டசபை தேர்தலில் மற்ற கட்சிகளை  விட காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும். மகாராஷ்டிராவில் அதிக  எம்எல்ஏக்களை கொண்ட தனிக்கட்சியாக காங்கிரஸ் உருவெடுக்கும். 
கடந்த லோக்சபா  தேர்தலில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தன்னுடைய கோட்டையை  காப்பாற்றினார். எனினும், பாஜ மூத்த தலைவர்களான நிதின் கட்காரி,  தேவேந்திர  பட்னாவிஸ் நடத்தைகளில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இந்த முறை தேவேந்திர  பட்னாவிஸ் தோற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால், பாஜ  வேட்பாளர்களில் பெரும்பாலானோர் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர்கள். 
காங்கிரசில் உள்ளூர் வேட்பாளர்கள்தான் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் உத்தவ்  சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாடியில்  முதல்வர் பதவி பற்றி எந்த பிரச்னையும் இல்லை. குறிப்பாக, முதல்வர் பதவி  இப்போது காங்கிரசின் செயல் திட்டத்தில் இல்லை. 
கூட்டணியில் அதிக இடங்களைப்  பெற்ற கட்சிக்கு இந்தப் பதவி கிடைப்பது போன்ற பார்முலா எதுவும் இல்லை.  எங்கள் உயர்மட்டக் குழு உட்பட அனைத்துக் கட்சிகளின் தலைமையும் இது குறித்து  முடிவெடுக்கும். நான் பலனை எதிர்பார்க்காமல், உழைப்பிலும் முயற்சியிலும்  நம்பிக்கை கொண்டவன். 
இவ்வாறு அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில்  ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரசுக்கு 80 முதல் 85  இடங்கள் வரை கிடைக்கும் என்று நானா பாடாலே கூறியிருப்பது அரசியல்  வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது

ராசி பலன்

திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து... மேலும் படிக்க

இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். பணி நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில்... மேலும் படிக்க

திட்டமிட்ட பணிகள் முடிவு பெறும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பணிபுரியும்... மேலும் படிக்க

எந்த ஒரு செயலிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தாய் வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். சிறு வணிகம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். வியாபாரப் பணிகள் மத்திமமாக நடைபெறும்.... மேலும் படிக்க

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் இன்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.... மேலும் படிக்க

உணவு தொடர்பான துறைகளில் திறமை வெளிப்படும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். சிகை அலங்காரப் பணிகளில் ஒருவித ஈர்ப்பு ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள்... மேலும் படிக்க

சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடினமான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மருத்துவ முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். விவசாயப் பணிகளில்... மேலும் படிக்க

குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். கோபத்தைத் தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில்... மேலும் படிக்க

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துக்களை வெளிப்படுத்தவும்.... மேலும் படிக்க

மனம் விரும்பிய படி சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வெளி வட்டார... மேலும் படிக்க

புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மேல்நிலைக் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல்... மேலும் படிக்க