ஆடி கடைசி வெள்ளியையொட்டி உடுமலை பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

ஆடி கடைசி வெள்ளியையொட்டி உடுமலை பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

உடுமலை, ஆக. 16-–


ஆடி மாத கடைசி வெள்ளிக் கிழமையையொட்டி உடுமலை பத்ரகாளி அம்மன் கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.


திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை சங்கிலி வீதியில் உடுமலை நாடார் உறவின் முறையார் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி பத்ரகாளியம்மன், சூலத்தேவர், விநாயகர், முருகன், கருப்பண்ண சாமி மற்றும் நவகிரக தெய்வங்க ளுக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பத்ரகாளியம்மன் சூலத்தேவரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தொடர்ந்து பத்ரகாளி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் மற்றும் புஷ்பாஞ்சலி வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை உடுமலை நாடார் மகளிர் அணி தலைவர் டாக்டர் கே.சிவக்கனி சுபாஷ் தலைமையில் நாடார் மகளிர் அணி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%