இன்ஸ்டாகிராம் காதலனை நம்பி நீர்வீழ்ச்சிக்கு சென்ற கல்லூரி மாணவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

இன்ஸ்டாகிராம் காதலனை நம்பி நீர்வீழ்ச்சிக்கு சென்ற கல்லூரி மாணவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

பெங்களூரு,


கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் கார்த்திக என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இருவருடைய ஆன்லைன் தொடர்பு நாளடைவில் காதல் உறவாக வளர்ந்தது. கடந்த ஜூன் மாதம் கடைசி சனிக்கிழமை அன்று கார்த்திக் அந்த மாணவியை வாலாச்சிலில் உள்ள ஒரு ஓட்டலுக்கு மதிய உணவிற்கு அழைத்தார்.


இதனையடுத்து அந்த மாணவி வாலாச்சில் பகுதிக்கு சென்று கார்த்திக்கை சந்தித்தார். இதையடுத்து மதிய உணவுக்கு பிறகு, அவர் மாணவியை அப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு காட்டு பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து கார்த்திக், மாணவியை வலுகட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.


அப்போது அங்கு வந்த கார்த்திக்கின் நண்பர் ராகேஷ் சல்தானா, மாணவியிடம் ஆசைக்கு இணங்க வற்புறுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, கார்த்திக்கின் நண்பர் ராகேஷ் சல்தானா, மாணவியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தார்.


அதே நேரத்தில் காதலன் கார்த்திக் இந்த செயலை வீடியோவில் பதிவு செய்து, பின்னர் மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளார். இந்த கூட்டு பாலியல் பலாத்காரம் குறித்து அந்த மாணவி மங்களூரு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை செய்த கார்த்திக் மற்றும் ராகேஷ் கல்தானா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


வீடியோவை பரப்பிய ஜீவன், சந்தீப், ரக்சித், ஷ்ரவன் மற்றும் சுரேஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து மங்களூர் காவல் ஆணையர் சுதீர் குமார் ரெட்டி கூறுகையில், கார்த்திக் மற்றும் ராகேஷ் சல்தானா ஆகிய இருவரும் மாணவியுடன் பாலியல் செயலில் ஈடுபட்டு. அந்த வீடியோவை பதிவு செய்தனர். பின்னர் அது பரப்பப்பட்டது.


இதில், பாதிக்கப்பட்ட பெண் மைனர் என்பதால், போக்சோ மற்றும் பாலியல் கூட்டு வன்கொடுமை ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவானிகளையும் வீடியோ பரப்பியவர்களையும் நாங்கள் கைது செய்துள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%