கடலூர் சிப்காட் தொழிற்சாலை விபத்து: தற்காலிக மூடல் உத்தரவு
Sep 08 2025
17

கடலூர், செப்.6-
கடலூர் சிப்காட் பகுதியில் பூச்சி மருந்து தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை கேஸ்கட் வெடித்து விபத்து நடைபெற்றது. இந்த விபத்து காரணமாக குடிகாடு பகுதியைச் சேர்ந்த 93 பேர் கடலூர் மற்றும் சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதில் 70 பேர் சனிக்கிழமை வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னையிலிருந்து வந்த மாசுக் கட்டுப் பாட்டு வாரிய உயர்மட்டக் குழுவினர் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு பிரிவினர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகி யோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்குப் பிறகு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணை இயக்குநர் செந்தில் விநாயகம், ஆய்வின் முடிவில் தொழிற்சாலையைத் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளதுடன், உயர்மட்டக் குழு அமைத்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப் பட்டுள்ளது என்று தெரிவித்தார். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் உத்தரவை அடுத்து தொழிற்சாலையின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே கடலூர் மாசுக் கட்டுப்பாட்டு இணைத் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகம், சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்ஒளி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?