புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மிஷன் இயற்கை என்ற திட்டம் தொடக்கம்
Sep 09 2025
14

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மரங்களை பாதுகாப்போம் மண்வளம் காப்போம் என்ற குறிக்கோளை நிறைவேற்ற
புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு மரக்கன்று வீதம் சுமார் 700 மரக்கன்றுகளை வழங்கி அவரவர் இல்லங்களில் நடும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வை புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. அன்னை ஷிபா
பிளாரோட் அவர்கள் தலைமை தாங்கி இயற்கையின் அவசியம் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக புதூர் வேளாண்மைத்துறை அலுவலர்கள் பள்ளி பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் மணிராஜ், ஆசிரியர் ஆனந்தராஜ், ஆசிரியர் கொப்பையன் மற்றும் ஆசிரியர்கள் கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?