குலசேகரபட்டினம் ஏவுதளத்துக்கு ரூ.382 கோடி இதுவரை செலவு
Aug 20 2025
14

புதுடெல்லி, ஆக.21-
சிறிய வகையிலான செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தை (எஸ்எஸ்எல்வி) செலுத்துவதற்காக குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்படவுள்ள ஏவுதள திட்டத்திற்கு 2025 ஜூலை 31 நிலவரப்படி ரூ.381.58 கோடி செலவிடப்பட்டிருப்பதாக விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மக்களவையில் நேற்று தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு கிழக்கு கடற்கரை சாலையில் மாற்றுப்பாதை அமைப்பதற்கான நிலம் தவிர, மற்ற பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது. இந்தத் தளத்தின் தொழில்நுட்ப வசதிகளுக்கான கட்டமைப்பு பணிகள் தொடங்கிவிட்டன. குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.985.96 கோடி. , இதில் ரூ.389.58 கோடி செலவிடப்பட்டுள்ளது. இஸ்ரோவின் சிறிய வகையிலான செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தையும் (எஸ்எஸ்எல்வி) தனியார் நிறுவனங்களின் செலுத்து வாகனங்களையும் இந்த ஏவுதளத்திலிருந்து செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?