சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை போக்சோவில் வாலிபர் கைது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை போக்சோவில் வாலிபர் கைது

தருமபுரி, ஆக.27-

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள பேதா தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (26). இவர் 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வ தாக ஆசை வார்த்தைக்கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் கர்ப்பமடைந்த சிறுமி, அஜித் குமாரிடம் கூறவே இருவரும் கோவிலுக்கு சென்று திரு மணம் செய்து கொண்டனர். இந்நிலையில், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்ப மடைந்தது தெரியவந்ததால், மருத்துவமனை நிர் வாகம் அளித்த புகாரின் பேரில் அரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் அஜித்குமார் மீது போக்சோ சட்டத் தின்கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%