
மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் - 37-
31.8.2025.
"பண்டையத் தமிழ் பன்னாட்டு மொழி "
மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.
" "பண்டையத் தமிழ் பன்னாட்டு மொழி "எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது. துணைத்தலைவர் முனைவர் இரா. வரதராஜன் வரவேற்றார்.பொருளாளர் இரா..கல்யாணசுந்தரம்,முன்னிலை வகித்தார் .
செயலர் கவிஞர் இரா .இரவி தலைமையில் ,கவிஞர்கள் ,இரா .கல்யாணசுந்தரம் , முனைவர் இரா.வரதராஜன், கு கி .கங்காதரன் , அஞ்சூர்யா க .ஜெயராமன் , கி .கோ .குறளடியான் ,கு .பால் பேரின்பநாதன், ச. லிங்கம்மாள், சிவ சத்யா , இளையான்குடி இதயத்துல்லா, பா .பழனி , பா .பொன் பாண்டி ஆகியோர் கவிதை பாடினார்கள்..தென்காசி திருவள்ளுவர் கழகம் புலவர் ம. ஆறுமுகம் கவிதையை அவரது மகன் வாசித்தார். அவரது பேத்தியும் வந்திருந்தார்கள்.
பேரவையின் சார்பில் சிறப்பாக கவிதை பாடிய கவிஞர் பால் பேரின்பநாதன், அஞ்சூர்யா க .ஜெயராமன் இருவருக்கும் தென்காசி திருவள்ளுவர் கழகம் வெளியிட்ட திருக்குறள் உரை நூலும் ,முனைவர் வரதராசன் எழுதிய நூலும் பரிசாக வழங்கினர். துனைச் செயலர் கு கி .கங்காதரன் நன்றி கூறினார்
செந்தமிழ்க் கல்லூரியின் விரிவுரையாளர் அதிவீர பாண்டியன் உள்ளிட்ட பலர் வருகை தந்தனர் .
கவியரங்கம் நடத்துவதற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை இலவசமாகத் தந்து உதவும் புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி .வரராசன் அவர்களுக்கு அனைவரும் நன்றி கூறினார்கள் .
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?