
22 யூனிட்கள் இரத்ததானம் செய்யப்பட்டது
சீர்காழி , ஆக , 23 -
79 -வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கிளை மற்றும் சீர்காழி அரசு பொது மருத்துவமனை இணைந்து சீர்காழி விளந்திடசமுத்திரத்தில் உள்ள சீர்காழி கிளை தவ்ஹீத் மர்கஸில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இதில் 19 பெண்கள் உட்பட 77 நபர்கள் இரத்ததானம் செய்வதற்கு தன்னார்வத்துடன் கலந்து கொண்டனர். 5 பெண்கள் உட்பட 22 யூனிட்கள் இரத்ததானம் செய்யப்பட்டது.
இம்முகாமில் சீர்காழி அரசு மருத்துவமனை இரத்தவங்கி குழுவினர் மருத்துவர் அறிவழகன் தலைமையில் கலந்து கொண்டு இரத்த கொடைகளை பெற்றுக்கொண்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?